பக்கம்:தமிழக வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

215


எடுத்து உருவாக்கி அவற்றில் உள்ளதை அறிய முயன்று அதில் வெற்றியும் பெற்றனர். பல ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள் எடுக்கப்பெற்றன. ஒவ்வோர் ஆண்டிலும் சிற்சில பகுதிகளை அரசாங்கத்தார் வெளியிட்டு வந்தனர். அவற்றால் அறியப்பெற்ற உண்மைகள் அளப்பில. எனினும், அந்த வெளியீட்டு முறை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப் பெற்றது எனலாம். போர் காரணமாகப் படி எடுப்பதும், கல்வெட்டுக்களைத் தொகுத்து வெளியிடுவதும், அவற்றின் குறிப்புக்களை ஆய்ந்து காண்பதும் ஒரு வேளை நிறுத்தப் பெற்றிருக்கலாம். ஆயினும், உரிமை பெற்ற நம் நாட்டிலே அதற்காக ஒன்றுமே செய்யவில்லை. [1]கடந்த பதினோர் ஆண்டுகளாகப் படி எடுத்தத கல்வெட்டுக்கள் எத்தனை? எடுத்த கல்வெட்டுக்கள் ஏன் தொடர்ந்து வெளியிடப் பெறவில்லை? இப்பகுதி இந்தியா அரசாங்கத்திடம் இருக்கின்றமையின், அது நன்கு இப் பகுதி தொழிற்பட ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் அனைத்தும் வெளியிடப் பெறின், இந்நாட்டைப் பற்றியும், பிற இயல்புகள் பற்றியும் எண்ணற்ற பல உண்மைகள் வெளியாகக்கூடும். வரலாற்று மாணவர்கள் அவற்றின் வழி நிலைத்த பயன் பெறுவார்கள். அத்துறையில் இந்திய அரசாங்கம் கருத்திருத்த வேண்டும் என்று கூறி மேலே செல்லலாம்.

தஞ்சை வேந்தர்:

சங்க காலத்தில் தலைசிறக்க வாழ்ந்த சோழர்குலம் சுமார் ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு மேல் தலை தூக்காது இருக்குமிடம் தெரியாது காலம் கழித்தது எனலாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப்பின் தெற்கே பாண்டிய-


  1. முதற்பதிப்பு வந்த ஆண்டு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/217&oldid=1358612" இலிருந்து மீள்விக்கப்பட்டது