பக்கம்:தமிழக வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

தமிழக வரலாறு


தமிழ் நாடு முழுவதும் தன் கீழ்க் கொணர்ந்தான் பராந்தகன். தோற்ற இராசசிம்மன் ஈழநாடு சென்று மறுபடியும் படை வேண்டினான். ஆண்டிருந்த ஈழநாட்டு மன்னன் நான்காம் தப்புலன் மறுக்கவே தன் முடியையும் பிற சின்னங்களையும் அவனிடம் ஒப்படைத்து, தாய் வானவன் மாதேவியோடு சேர நாடு சென்று தங்கி விட்டான். பராந்தகன் மதுரை சென்று விஜயா பிடேகம் செய்துகொள்ள முயன்றகாலை முடியும் பிறவும் காணாமையின், உற்றது அறிந்து, ஈழமன்னனை அவற்றைத் தரவேண்டினான். ஈழமன்னன் தரமறுக்கவே. சோழர் படை ஈழம் சென்று, உள்நாட்டில் புகுந்து தென் கிழக்குப் பகுதிவரையில் தன்கைக் கொண்டது. அதற்கு மேல் ஈழமன்னன் இருந்த பகுதிக்குச் செல்ல முடியாது திரும்பிற்று. எனினும், பராந்தகன் ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’யானான். இந்தச் சோழர்கள் தம்மைப் பரகேசரி என்றும் இராசகேசரி என்றும் வழங்கிக்கொள்வர் தந்தை பரகேசரியாயின் மகன் இராசகேசரி என்ற முறையில் அவை செல்லும்.

வடக்கே நெல்லூர், இட்டி முதலிய பகுதிகளையும் பராந்தகன் 34-ஆம் ஆட்சி ஆண்டில் (கி. பி. 941) வென்று கொண்டான். வடக்கே வலுவுற்றிருந்த இராட்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ணன் தன் மகள் இளங்கோப் பிச்சியைப் பராந்தகனுக்கு மணம் செய்து கொடுத்தான். பின்பு பராந்தகன் தன் மகளை இராட்டிரகூடக் கோவிந்தனுக்குக் கொடுத்தான். இப்படி வலுவுற்ற இரண்டு குலமும் மகட்கொடையால் ஒன்றாகி, நாட்டில் பெரும்போர்கள் நிகழாமல் காத்தன எனலாம். பராந்தகன் வடபகுதியில் உள்ள வானபர், வைதும்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/222&oldid=1358742" இலிருந்து மீள்விக்கப்பட்டது