பக்கம்:தமிழக வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

223


அவற்றைப்பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. இவனுக்கு மனைவியர் மூவர். கீழைச்சளுக்கியர் மகள், வைதும்பர் மகள், கொடும்பாளுர்ச் சிற்றரசர் மகள் மூவரும் மனைவியர். தாய் பழுவேட்டரையன் மகள் போலும்! தந்தை காலத்தில் அண்ணனுக்குப் பின் (இராசாதிததன்) சோழ நாட்டு வட எல்லையைக் காத்திருந்தான். இவன் ஆத்தூரில் துஞ்சியவன் இவன் பேர் இட்டு, இவனுடைய பேரன், வடஆர்க்காட்டு மாவட்டம் திருவல்லத்தில் ஒரு கோயிலை 'அரிஞ்சயேச்சுரம்’ என்றே அமைத்தான். அது இப்போது சோழேச்சுரம் என்ற பெயரில் உள்ளது. இவனுக்குப் பின் பராந்தகன் அல்லது சுதந்தரசோழன் பட்டத்துக்கு வந்தான். இவன் அரிஞ்சயனுக்கு வைத்தும் பராயன் மகள் வயிற்றுப்பிள்ளை போலும்! இவன் சிறந்த வீரனாய் இழந்த சில பகுதிகளைக் கைக்கொண்டான் போலும்!

சுந்தர சோழன்:

பராந்தகன் என்னும் சுந்தர சோழன் பதின்மூன்று ஆண்டுகள் (957-970) அரசாண்டவன். இவன் மதுரையைக் கொண்டமையின், 'மதுராந்தகச் சுந்தரசோழன்' என வழங்கப் பெற்றான். இவன் காலத்தில் பாண்டியன் இராசசிம்மன் மகனாகிய வீரசிம்மன் ஆண்டிருக்க வேண்டும் அப்பாண்டியன் சோழன் தலை கொண்ட கோ வீரபாண்டியன்' எனப் பாராட்டப் பெற்றமையின், சோழருள் ஒருவர் தலையைப் போரிலோ அன்றி வேறு வகையிலோ கொய்து கொண்டவன் ஆதல் வேண்டும். அவ்வாறு சோழர் தலை கொண்டதறிந்தே பராந்தகன் அவன் மேல் படை எடுத்திருக்கக் கூடும். சேவூரில் இருவருக்கும் 962இல் போர் நடந்தது. சோழன் வென்று மதுரை கொண்கு கோராசகேசரியானான். அப்போரில் பாண்டியனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/225&oldid=1376408" இலிருந்து மீள்விக்கப்பட்டது