பக்கம்:தமிழக வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

225


சுந்தரசோழன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் என்று கண்டோம். அவனை அரசியல் காரணமாகச் சிலர் வஞ்சித்துக் கொன்றனர் என்பர். அவனை இரண்டாம் மகன் இராசராசனே கொன்றான் என்பர் சிலர். அது பொருந்தாது. ஏனெனில், இராசராசன் பட்டத்துக்கு வந்த ஆட்சி ஆண்டு இரண்டில் அவனே தன் அண்ணனைக் கொன்றவரைக் கண்டு பிடித்துத் தண்டனை கொடுத்துள்ளான். அண்ணன் இறந்ததும் தானே பட்டதுக்கு வரவேண்டுமெனவும் இராசராசன் விரும்பவில்லை; தன் சிற்றப்பன் உத்தமசோழன் ஆளும்வரை தான் ஒதுங்கி இருந்தே, பிறகு சோழ நாட்டு அரியணை ஏறினான். ஆதித்த கரிகாலனை உத்தம சோழன் கொன்றான் என்பார் கூற்றும் சற்றும் பொருந்தாது. அவனும் கொலை செய்தாரைக் காண்டதில் பெரு முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் பெற்றான் எனலாம்.

மகன் பிரிவால் சுந்தரசோழன் வாடினான்; அதே வருத்தத்தில் காஞ்சியில் பொன் மாளிகையில் துஞ்சினான். அவன் மனைவியாம் வானவன்மாதேவி உடன்கட்டை ஏறினாள். இராசராசன் பின் அமைத்த பெரிய கோயிலில் அவன் தமக்கை குந்தவ்வை தம் தாய் தந்தையர் உருவத்தைப் படிமம் செய்து வணங்கி வந்தாள்; தந்தை பேரால் தஞ்சையில் மருத்துவசாலை அமைத்தாள். சுந்தரப்பள்ளி, சுந்தரப் பேரேரி, சுந்தரபுரம் அனைத்தும் அவன் நினைவுக்காக எழுந்தனவே சுந்தர சோழன் சிறந்த சிவபக்தன்.

இச் சுந்தரசோழன் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் வீரசோழியத்தில் இவனைப்பற்றி இரு பாடல்கள் உள்ளன. இவனை இப்பாடல்கள் ‘பழையாறைச்

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/227&oldid=1358767" இலிருந்து மீள்விக்கப்பட்டது