பக்கம்:தமிழக வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

தமிழக வரலாறு


சுந்தரசோழன்’ என்று குறிப்பதால், இவன் பழையாறையில் இருந்து ஆண்டான் போலும்!

உத்தம சோழன்:

சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்தன் மகன் உத்தம சோழன் ஆண்டனன் (970-995). இவன் பரகேசரியானான். சுந்தர சோழனுக்குப் பின் இராசராசனே பட்டத்துக்கு வர மக்கள் விரும்பினாலும், இராசராசனே கண்டராதித்தன் மகனாகிய உத்தமசோழன்தான் முறையாக ஆளவேண்டும் என்றான். இவன் கல்வெட்டுக்கள் பல செங்கற்பட்டு, வடார்க்காட்டு மாவட்டங்களில் உள்ளமையின், தொண்டை நாடு இவன் கீழ் இருந்தது எனலாம். சோழ நாட்டிலும் இவன் கல்வெட்டுக்கள் மிகுதி. இவன் குடும்பமே பல அறச யெல்கள் புரிந்தது. இவன் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அக்கால நாட்டின் நிலையை நன்கு காட்டுகின்றன.

இவனுக்கு மனையியர் பலர். பட்டத்தரசி திரிபுவன மாதேவி. இராசராசன் காலத்து ஆலயங்களைப் பாதுகாத்த கண்டராதித்தன் இவன் மகனாவன். இவன் காலத்தில் பொற்காசு இருந்தது. அதில் புலி உருவம் பொறித்திருந்தது. எழுத்து வட்டெழுத்து என்பர். இவன் நாட்டை அமைதியாய் ஆண்டான். இவன் அன்னை நல்ல சமயத் தொண்டு செய்து, இராசராசன் காலத்திலும் பல பணி புரிந்து கி.பி. 1001 வரை வாழ்ந்தவள். கங்கை கொண்ட சோழனாகிய இராசேந்திரன், செம்பியன் மாதேவியாகிய இவளது படிமத்தைச் செய்து வழிபட்டான்.

இவ்வாறு அமைதியோடு ஆண்ட உத்தம சோழனுக்குப் பிறகு நாட்டு மக்கள் எதிர்பார்த்தபடி இராசராசன் கி. பி. 985இல் சோழநாட்டுப் பெரு மன்னனானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/228&oldid=1358772" இலிருந்து மீள்விக்கப்பட்டது