பக்கம்:தமிழக வரலாறு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

227

II
தந்தையும் தனயனும்


இராசராசன் இளமை:

தமிழ் நாட்டு வரலாற்றிலேயே சிறந்த மன்னராகப் போற்றப்பெறும் இராசராசனும் இராசேந்திரனுமே தந்தையும் தனையனுமாவார்கள். இராசராசன் பராந்தகனுக்கு வானவன் மாதேவி வழியாகப் பிறந்தவன். இவன் ஐப்பசிச் சதய நட்சத்திரத்தில் பிறந்தவன். திருவெண்காட்டில் அந்நாளில் இவன் இறைவனுக்கு விழாச் செய்து வந்தான். இவன் ஆட்சி பற்றிப் பலரும் பலவாறு புகழ்ந்துள்ளனர். உலகத்தைத் தான் தாங்கிக் கொண்டு ஆதிசேடனுக்கு உண்டான பளுவைக் குறைத்தவன் என்று இவனைப் புகழ்ந்தனர். இவன் கையில் சங்குச் சக்கரக் குறிகள் இருந்தமையின், இவன் காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே என்றனர். இவனது இயற்பெயர் அருண்மொழித்தேவன் என்பது. இவனது ஆட்சி ஆண்டு நான்கில் மதுராந்தகக் கல்வெட்டு இவனை மும்முடிச் சோழன் எனப் புகழ்வதால், இவன் ஆட்சி ஆண்டு மூன்றிற்குள் மற்ற இருபெரு வேந்தரையும் வென்றவனாதல் வேண்டும். எனவே, மேலைக் கடற்கரையில் காந்தளூர்ச்சாலையில் கலமறுத்த போர் அதற்கு முந்தியதாக வேண்டும் அந்த வெற்றி ஆண்டிலிருந்து இவன் இராசராசன் எனவே சிறக்க வழங்கப் பெற்றான். இவனது தில்லைப் பணிகளைப் பாராட்டி கி.பி. 1004ல் இவனுக்குத் தில்லைவாழ் அந்தணர் இராசராசன் எனப் பெயரிட்டனர் என்பது பொருந்தாது. 1004க்கு முன்பே இவனுக்கு இராசராசன் என்ற பெயர் நிலைத்து விட்டது. இவன் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/229&oldid=1358777" இலிருந்து மீள்விக்கப்பட்டது