பக்கம்:தமிழக வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது வரலாறு?

21


சாஸ்திரியார் அவர்களும் வரலாறு என்பது பல்வேறு சூழல்களில் பட்டுழன்று, வாழ்வில் பெறும் வெற்றி தோல்விகளையேற்று மேலோங்கும் சாதாரண மனிதனது வாழ்வு, வளன், பிற சிறப்பு இயல்புகள், அவன் மற்றவரோடு கலந்து பழகும் முறை, இன்ன பிறவற்றை விளக்குவதே ஆகும் என்ற அடிப்படையிலேயே தம் தென்னிந்திய வரலாற்றை எழுதுகிறார்.

இவ்விரு பேராசிரியர்களின் கருத்துக்களுக்கும் அரணாக மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர் பலர் புத்தம் புதிய வரலாற்று நூல்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே, இன்று வரும் பல வரலாற்று நூல்கள் உண்மையில் மக்கள் வாழ்வோடு பொருந்தியனவாகத் தான் உள்ளன. பள்ளியில் பயிலும் மாணவர்கள் கூட இப்போது வரலாற்று நூல் படிப்பதை விட்டுச் சமூக நூலைத்தான் பயில்கின்றார்கள். எனவே வரலாறு என்பது மக்கள் வாழ்வைச் சித்தரிக்கும் ஒன்று எனக் கூறி விடலாம்.

வரலாறு அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று:

உலகில் காணும் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு[1] ஏன்? காணாதனவற்றுக்குங்கூட வரலாறு உண்டு எனலாம். காற்றினைக் கண்ணால் காண்பதில்லை ஆனால் அதன் தோற்ற வளர்ச்சி பற்றியும், அதன் முன்னைய ஆற்றல்கள் பற்றியும், இன்றைய செயல்களைப் பற்றியும் கூறுவதும் வரலாறு தானே? இதைப் போன்றதே விஞ்ஞானத்தின் வரலாறும். வரலாறு விஞ்ஞானத்தின் வேறுபட்டது எனவும் விஞ்ஞான ஆய்வுக்கு வேண்டிய அறிவு


  1. The History of South India
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/23&oldid=1356981" இலிருந்து மீள்விக்கப்பட்டது