பக்கம்:தமிழக வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தமிழக வரலாறு


னோடு மாறுபட்ட பாண்டியனுக்கும் சேரனுக்கும் உதவியவன். எனவே, இராசராசன் அந்நாட்டின் மேல் படை எடுத்துச் சென்றான். இவன் படை வருவதறிந்து மகிந்தன் அஞ்சித் தென்கிழக்கு இலங்கையில் ஓடி (இப்போதைய கதிர்காமப் பகுதி) ஒளிந்துகொண்டான். மகன் இராசேந்திரனே படையைச் செலுத்திச் சென்றான். அவன் படையால் அனுராதபுரம் நிலை குலைக்கப்பெற்றது. ‘பொலனருவா’வைக் கைப்பற்றி அதைச்சோழர் தலைநகராக்கினான் இராசேந்திரன் ஈழ நாடு ‘மும்முடிச் சோழமண்டலம்’ என்று சிறந்த வகையில் இராசராசன் பட்டப்பெயரால் வழங்கப்பெற்றது. தமிழ் நாட்டு முறையில் அங்கேயும் பல கோயில்கள் கட்டப்பெற்றன. அவற்றிற்கெனப் பல தானங்களும் வழங்கப் பெற்றன. இவ்வாறு தமிழ் நாடு முழுவதையும் தெற்கே உள்ள ஈழநாட்டையும் தன் கீழ்ப்படுத்தி எதிரிகளே இல்லை என்னுமாறு சிறக்க வாழ்ந்தான் இராசராசன். பொலனருவா தலைநகரான சிறப்பையும் அனுராதபுரம் அழிவுண்டைதையும் கொழும்புக் காட்சிச் சாலையிலுள்ள கல்வெட்டுக்கள் பல மெய்ப்பிக்கின்றன. பொலனருவா இன்னும், அன்றைய சோழர் ஆக்கப்பணிகள் சிலவற்றைத் தாங்கி, தான் சோழர் தலைநகராய் இருந்ததை மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறது.

வடநாட்டுப் போர்கள்:

தென்னாட்டைத் தன்னாட்சிக்குட்படுத்திய இராசராசன் வடக்கு நோக்கித் திரும்பினான். மேலைச் சாளுக்கிய மன்னனாகிய சத்தியாசிரயனை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிக்கின்றன. இவ்வெற்றியைப் புகழாவிடினும், இவன் சளுக்கிய நாட்டைச் சூரையாடிய செய்தியைத் தார்லார் மாவட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/232&oldid=1358792" இலிருந்து மீள்விக்கப்பட்டது