பக்கம்:தமிழக வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

233


தஞ்சைப் பெரிய கோயில்:

இன்றளவும் தன் பெருமை குன்றாது, இராசராசன் பெயரை உலகுக்கு உணர்த்திக்கொண்டிருக்கும். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவன் இராசராசனே. அக் கோயிலைக் காண்பார் அவனை வியவாதிரார். பல்லவர் ஆட்சிக்குக் கயிலாச நாதர் கோயில் எவ்வாறு மைல் கல்லாய் அமைந்ததோ, அவ்வாறே இந்தப் பிற்காலச் சோழர் ஆட்சிக்கு இத்தஞ்சைப் பெரிய கோயிலே மைல் கல்லாய் அமைந்தது. இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உள்ளது. விமானம் 216 அடி உயரம் உள்ளது. இராசராசன் ஆட்சி ஆண்டு 19இல் தொடங்கி 24இல் முடிக்கப் பெற்ற கோயில் இது. கருங்கல்லே காண இயலாத அந்தக் காவிரிக் கரையில் எங்கிருந்தோ கற்களைக் கொண்டு வந்து இத்துணைப் பெரிய கோயிலை நான்கே ஆண்டுகளில் கட்டி அமைத்த அந்த இராசராசனை விவாதிருக்க முடியுமோ! கி. பி. 1010இல்– தன் ஆட்சி ஆண்டு 25இல் விழா எடுத்துக் கோயிலைச் சிறப்பித்தான் இராசராசன். இதன் வாயில்களுக்கு அவன் பெயர்களே இடப்பெற்றுள்ளன. கேரளாந்தகன் வாயில், இராசராசன் வாயில் என்பன அப்பெயர்கள். இக்கோயிலுக்குக் கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பதிகமும் உண்டு. இக்கோயிலும் தேவாரத்தில் வரும் தஞ்சைத் தளிக்குளமும் ஒன்று என்பர் திரு. பண்டாரத்தார் அவர்கள்[1] எனினும், சிலர் அது வேறு என்றும், திருவாரூர்ப் பக்கத்தில் இருந்த ஒரு சிற்றூர்க் கோயிலே அது என்றும் கூறுவர். தேவார காலத்தில் தஞ்சாவூர் இன்மையின், அவர் கூற்று மெய்யெனவே


  1. பிற்காலச் சோழர்-பக்கம் 122.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/235&oldid=1358809" இலிருந்து மீள்விக்கப்பட்டது