பக்கம்:தமிழக வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

235


நாட்டுப் பிரிவுகள்:

நாடு, ஆட்சி முறையின் எளிமைக்காகப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் தக்கவர் தலைமையின் கீழ்ப் பாதுகாக்கப்பட்டது. நாட்டிலுள்ள ஊர்கள் பெரும்பாலும் சுதந்திரம் பெற்ற வகையில் தத்தம் தேவைகளை நிறைவு செய்து கொண்டன. ஊர்ச் சபைகளே ஊர்களின் நிருவாகத்துக்கும் பொறுப்பாய் இருந்தன. இராசராசனுக்கு உதவியாகப் பல சிற்றரசர்களும், பல அரசியல் அதிகாரிகளும் இருந்தனர். பல குறுநில மன்னன் திறை செலுத்தினர். பழுவேட்டரையன் (திருச்சி), கொல்லி மழவன், சங்கர தேவன் (திருவல்லம்), வோளண் சுந்தர சோழன் (கொடும்பாளூர்), நன்னமரையன் (கடப்பை), இலாடப்பேரையன், வாண கோவரையன் முதலியோர் அவருள் முக்கியமானவர். அவர் போன்ற பல நல்ல அரசியல் அதிகாரிகள் இராசராசனுக்கு அரச காரியங்கள் செவ்வையாக நடைபெற உதவினர். இவன் வரலாற்றைக் கூறும் ‘இராஜராஜ விஜயம்’ என்னும் நூல் இருந்ததாகக் கல்வெட்டால் அறிகிறோம் இவனும் இவன் குடும்பத்தாரும் இவன் காலத்தில் செய்த அறங்கள் பலப்பல. இவன் காலத்துத் தமிழகம் பெற்ற நன்மைகளைப் பின் ‘சோழர் காலத்தில் தமிழ்நாடு’ என்னும் பகுதியில் காணலாம்.

இராஜேந்திரன் (1012-1041)

இராசராசனுக்குப் பின் இவன் மகன் முதலாம் இராசேந்திரன் பட்டதுக்கு வந்தான் இவன் தந்தை காலத்திலேயே அரச காரியங்களில் பங்கு கொண்டு படைத் தலைமையேற்றுப் பல போர்களில் வெற்றி கொண்டவன் என்பதைக் கண்டோம். இராசராசன்.=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/237&oldid=1358819" இலிருந்து மீள்விக்கப்பட்டது