பக்கம்:தமிழக வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழக வரலாறு


வரலாற்றை அறிய வேண்டுவதில்லை எனவும், பலரும் நினைக்கின்றனர். ஆய்வுக் களத்தில் ஆழ்ந்த சிந்தனையோடு அல்லும் பகலும் தளராது உழைக்கும் விஞ்ஞானி நுண்ணறிவைப் பற்றி நாம் ஒன்றும் குறை கூற முடியாது. எனிலும், அவ்விஞ்ஞானியையும், அவனது ஆய்வின் தோற்ற வளர்ச்சியையும் உலகுக்கு விளக்கிக் காட்டுவதும் வரலாற்று நூல் தானே? பறக்கும் விமானத்தைப் பார்க்கும் போது அதன் தோற்றத்திலிருந்து-அதை உருவாக்கிய அந்த முதல் ஆய்வாளர் செயல் தொடங்கி இன்று வரை அதன் வளர்ச்சியையும், அதை வளர்த்த பெரியவர்களையும் வரிசைப்படுத்திப் பார்க்கும் அந்த ஒன்று ‘விமானம் வளர்ந்த வரலாறு’ தானே? அதைப் போன்றனவே அணுக்குண்டு வரலாறும் பிறவும் எனலாம். எனவே விஞ்ஞானமாயினும், அன்றி வேறு எதுவாயினும் அதன் வாழ்வை உலகுக்கு உணர்த்துவது வரலாறு அல்லாது வேறு இல்லை என்பது தெளிவு. எனவே, வரலாறே உலக வாழ்வின் அடிப்படையாகின்றது.

வரலாறு வளர்ந்த வகை :

இனி, இவ்வரலாறு வளர்ந்த விதத்தினை ஆராய்வோம். தமிழ் நாட்டில் மட்டுமன்றி, உலகிலேயே இந்த வகையான வரலாற்றைப் பண்டைக் காலத்தில் யாரும் எழுதி வைக்கவில்லை. தம்மைப் பற்றிப் பிற்காலத்தவர் அறிந்து கொள்ள வேண்டும் என்று நல்லவர் நினைப்பதில்லை. எந்தச் செயலைச் செய்தாலும் அது கடமையின் பாற்பட்ட ஒன்று என்று செய்வார்களேயான்றி, அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆகவே, பழங்காலத்தில் நல்லவர்கள் செய்த பல செயல்களைப் பற்றிய குறிப்புக்கள் நமக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/24&oldid=1356986" இலிருந்து மீள்விக்கப்பட்டது