பக்கம்:தமிழக வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

தமிழக வரலாறு


1029இல் சோழநாட்டிலேயே இறந்தான் என்று மகாவமிசம் கூறுகிறது. எனினும், இராசேந்திரன் கல்வெட்டு ஒன்றும் அவ்வாறு குறிக்கவில்லை. கோனேரி இராசபுரக் கல்வெட்டு ஒன்று மட்டும் மகிந்தன் சோழநாடு கொண்டு வரப்பட்ட பின்னே பணிந்தான் எனக் குறிக்கின்றது. பின்பு ஈழ நாட்டில் மறைந்திருந்த இந்த மகிந்தன் மகன் காசியபன் 1029இல் வெளிப்பட்டு, உரோகண நாட்டைக் கைப்பற்றி 1014 வரை அரசாண்டான் என்பதும் தெரிகிறது.

சோழ பாண்டியனானான்:

சேர பாண்டிய நாடுகள் தந்தை காலத்திலேயே சோழர் ஆணையின் கீழ் வந்துவிட்டமையின், இராசேந்திரன் மதுரையிலிருந்து கொண்டே, ஈழத்தில் மீட்ட பாண்டியன் முடிகொண்டு பட்டாபிஷேகம் செய்து கொண்டான். அது முதல் ‘சோழ பாண்டியன்’ என்ற பட்டத்தையும் பெற்றான். வடக்கே சாளுக்கியரோடு இரு தலைமுறையாக மகட்கொடை காரணமாக நட்பு ஏற்பட்டிருந்தது அறிவோம். விமலாதித்தன் இராசேந்திரன் தங்கை குந்தவ்வையை மணந்துகொண்ட பின், கோட்டாற்றில் சாளுக்கியன் நந்தாவிளக்கு இருந்ததைக் கல்வெட்டுக் காட்டுகிறது.

கீழைச் சாளுக்கியர் நட்பினராய் இருந்தபோதிலும் மேலைச் சாளுக்கியர் விரோதிகளாகவே இருந்தனர். ஐந்தாம் விக்கிரமாதித்தன் தம்பி சயசிங்கன் அப்போது ஆண்டு வந்தான். அவன் சோழ நாட்டு வடமேற்கு எல்லைப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு ஆளத் தொடங்கினான். அதை அறிந்த இராசேந்திரன் தன் படையொடு சென்று பல்லாரி ஜில்லாவில் உள்ள முயங்கி என்ற இடத்தில் அவனுடன் போர் செய்து வெற்றி பெற்று மீண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/240&oldid=1376401" இலிருந்து மீள்விக்கப்பட்டது