பக்கம்:தமிழக வரலாறு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

239



கங்கைக் கரை நோக்கி:

தென்னாடு முழுவதும் வெற்றி கொண்டபின் இராசேந்திரன் வடநாடு நோக்கிப் படை எடுக்க நினைத்தான். கங்கைநீரைக் காவிரிக்கரைக்குக் கொணர்ந்து நாட்டைத் தூய்மைப்படுத்த நினைத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடு குறிக்கின்றது. எனவே, இவனது ஆட்சி ஆண்டு பதினொன்றில் வடநாட்டுப் படையெடுப்பு தொடங்கியது. தான் நினைத்தபடியே வழியில் உள்ள அனைவரையும் வென்று கங்கையைக் கொணர்ந்து, அதன் நினைவாகக் கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரையும் அமைத்து. அதில் சிறக்க ஆண்டான் இவன்.

வடநாட்டுப் படையெடுப்பின்போது வழியில் உள்ள எத்தனையோ நாடுகளை வென்றாக வேண்டுமன்றோ! அதற்குத்தக்க வகையில் ஒரு சிறந்த படைத்தலைவனைத் தக்க சேனையுடன் வடநாடு நோக்கி அனுப்பினான். அதே வேளையில் காவிரிக்கு வடகரையில் ஒரு புதுத் தலைநகரை அமைக்கத் திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் முனைந்து நகரை உருவாக்கிக் கொண்டிருந்தான் இராசேந்திரன். வடக்கு நோக்கிச் சென்ற சேனை வேங்கி நாடுவரை யாதொரு மாறுபாடும் இன்றிச் சென்றது எனலாம். வேங்கி நாட்டுக்கு வடக்கிலிருந்த, இக்கால விசாகப்பட்டின மாவட்டத்தில் அக்காலத்தில் நாகர் ஆண்டிருந்தனர். எனவே அந்நாடு 'மாசுண தேசம்' என வழங்கப்பெற்றது. அதற்குச் சக்கரக் கோட்டம் என்ற மறு பெயரும் உள்ளது போலும். அந்த நாட்டை வென்று, பின் மகாகோசல நாட்டில் புகுந்து அதையும் சோழர் படை வென்றது. அதற்குப் பிறகு தம்மபாலனுடைய தண்டபுத்தி நாடும், இரணசூரனது தக்கணலாடமும் கோவிந்த சந்தனுடைய வங்காளதேசமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/241&oldid=1376400" இலிருந்து மீள்விக்கப்பட்டது