பக்கம்:தமிழக வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

241


சிறியதாயினும் தஞ்சைப் பெரிய கோயிலை ஒத்தே விளங்கிற்று. அவ்வூரின் அருகில் இராசேந்திரன் ‘சோழ கங்கம்’ என்ற ஏரியையும் வெட்டி, அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நீர்ப்பாசன வசதியையும் செய்து கொடுத்தான். அதைக் கல்வெட்டுக்கள் நீர்மயமான ‘வெற்றித் தூண்’ எனப் புகழ்கின்றன. அதன் வடிகாலே, இன்று தென்னார்க்காட்டில் வீராணத்தேரி என வழங்கும் பெரிய வீரநாராயண ஏரியாகும். இவ்வாறு பலவகையில் தன் நினைவுச் சின்னமாக எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம், பெரிய கோயிலைக் கொண்ட தஞ்சைக்கு மாற்றாக அமைந்தது. இதை மக்கள் விரும்பவில்லை போலும்! தனது பெருமையாக வெற்றியை விளக்க இராசேந்திரன் அந்நகரை அமைத்தானேனும், மக்கள் அதைப் போற்றாது உண்மைத் தொண்டே சிறந்த பெரிய கோயிலையும் அதைச் சூழ்ந்த தஞ்சையையுமே மதித்தனர். எனவே, அவன் காலத்திற்குப்பின் அவன் பரம்பரையினர் தொடர்ந்து ஆள சிறிது நாட்களுக்குப்பின் கங்கை கொண்ட சோழபுரம் சிற்றூராகிவிட்டது. இன்று அது சிதைந்த கோலத்தில் கோயிலை மட்டும் கொண்டு, காவிரியின் வடகரையில் சிற்றூராய்க் காட்சி அளிக்கின்றது.

பிறநாடுகளின் மேல் படையெடுப்பு:

இது நிற்க. இவ்வேந்தன் போர் கங்கைகொண்ட தோடு முடிவு பெறவில்லை இவன் சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான் எனவே, அதன் துணைகொண்டு கடாரத்தின் மேல் படையெடுத்தான் அந்நாட்டு மன்னன் சங்கராம விஜயோத்துங்கனை வென்று, பட்டத்து யானை, தோரணம், பெரும் பொருள் ஆகியவற்றைக் கொண்டு வந்தான். பின்பு இக்காலச் சுமத்திரா, ஜாவா எனப்படும்

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/243&oldid=1358846" இலிருந்து மீள்விக்கப்பட்டது