பக்கம்:தமிழக வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

243


போன்றே பல அரசியல் அதிகாரிகளும் உடன் கூட்டத்து அதிகாரிகளும் இருந்தனர். இவனுக்கு மக்கள் பலர். இவனுக்குப்பின் இவன் மக்கள் இராசாதிராசன், இராசேந்திரன், வீரராசேந்திரன் என்ற மூவரும் முறையே ஆண்டனர். பெண் மக்களும் இருந்தார்கள். தமிழர் பெருமையை உலகறியச் செய்தவன் இராசேந்திரன் ஆவன்.

III
இராசேந்திரனுக்குப் பின்

இராசாதிராசன்:

இராசேந்திரனுப்பின் அவன் மைந்தர் மூவரும் ஒருவர் பின் ஒருவராய்ப் பட்டதுக்கு வந்தனர் என்று கண்டோம். அவருள் மூத்த மகன் இராசாதிராசன் தந்தை இருக்கும்போதே 1018லேயே (சகம் 940) இளவசன் ஆனவன். எனவே, இவன் ஆட்சி ஆண்டு அதிலிருந்தே தொடங்கியிருக்கும். இவன் தந்தைக்குப் பின் பத்து ஆண்டுகளே கி.பி. 1054வரை அரசாண்டான். இவன் பூர நாளில் பிறந்தவன். இராசகேசரி பட்டம் பூண்டவன். இவனது மெய்க்கீர்த்திகள் மூன்று வகைப்பட்டன. 23-ஆம் ஆட்சி ஆண்டு வரை ‘திங்கள் ஏர்பெற வளர்’ என்ற தொடக்கமும், 30 ஆண்டுவரை ‘திங்களேர் தரு’ என்ற தொடக்கமும், பின் இறுதிவரை ‘திருக்கொடியொடு தியாகக் கொடி’ என்ற தொடக்கமும் பெற்றனவாகி அவை அமைகின்றன. இவன் இளவரசனாயிருந்தபோதே தந்தையின் வெளி நாட்டுப் போர்களில் நன்கு உதவினவன். தந்தைக்குப்பின் இரண்டாம் முறையாக ஆட்சியாண்டு 29இல் ஈழத்தின் மேல் படையெடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/245&oldid=1358875" இலிருந்து மீள்விக்கப்பட்டது