பக்கம்:தமிழக வரலாறு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

தமிழக வரலாறு


கொண்ட வீரராசேந்திரன் மேலைச்சாளுக்கிய நாட்டை அழித்துத் துங்கபத்திரையில் வெற்றித்தூண் நாட்டினான்; ஈழ நாட்டு மன்னன் விசயபாகுவுடன் போர்செய்து வென்றான்; 1068இல் கடாரம் சென்றுள்ளான்; அடைக்கலமடைந்த கடார வேந்தனுக்கு உதவினான். சாளுக்கிய மன்னன் சோமேசுவரன் II (ஆகவல்லன் மகன்) குத்தியில் நடைபெற்ற போரில் இவனால் தோற்கடிக்கப்பட்டான்.

இவனது ஆட்சி முழுவதிலும் போரேயாயினும், உள் நாட்டில் குழப்பமின்மையின், நாட்டில் அமைதி நிலவிற்று எனலாம். இவன் பிராமணருக்கு நிறையத் தானங்கள் வழங்கினான். இவனும் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலைநகராகக் கொண்டு வாழ்ந்தான். திருமுக்கூடல் கல்வெட்டால் இவன் கீழ்ப் பல அதிகாரிகள் இருந்தமையும் அவர் வழி இவன் நாடாண்ட சிறப்பும் விளங்கும்.

அதிராசேந்திரன்.

இவன் மகன் அதிராசேந்திரன் இவனுக்குப்பின் பரகேசரியாகப் பட்டதுக்கு வந்தான். ஆயினும், உடனே கி.பி. 1070இல், பட்டத்துக்கு வந்த சில தினங்களிலேயே இறந்தான். இவன் கொல்லப்பட்டான் என்பர். சாளுக்கிய விக்கிரமாதித்தன் வரலாறு எழுதிய பில்கணர் இவன் உள்நாட்டுக் கலகத்தால் கொல்லப்பட்டான் என்கிறார். எப்படியாயினும், சிறந்த இராசராசன், இராசேந்திரன் என்பவர்கள் பரம்பரை இவனோடு முடிவுற்றது எனலாம். இவனுக்குப்பின் சோழநாட்டை ஆளத்தக்க நல்ல வேந்தர் சோழர் பரம்பரையில் இல்லை. எனவே, இராசேந்திரன் மகளாகிய அம்மங்கைக்கும் கீழைச்சாளுக்கிய இராசரா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/248&oldid=1358912" இலிருந்து மீள்விக்கப்பட்டது