பக்கம்:தமிழக வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

249


அதே ஆண்டில் சேரர்களை எதிர்த்துக் கோட்டாறு, விழிஞம், காந்தளூர்ச்சாலை முதலிய இடங்களில் போர் செய்து வென்று, அங்கெல்லாம் நல்ல தலைவர்களை இருத்தி, ஆளப் பணித்தான். இவன் கல்வெட்டுக்கள் கோதாவரி, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் இருக்கின்றன. இவன் தென் கலிங்கத்தையும் வட கலிங்கத்தையும் வெற்றி கொண்டான். தென் கலிங்கப்போரில் இவன் மகன் விக்கிரமன் பங்கு கொண்டான். வட கலிங்கப் போர் கி.பி. 1096ல் நடைபெற்றது. தென்கலிங்கப் போர் கி.பி 1112ல் நடைபெற்றது.

கலிங்கத்துப் பரணி:

வட கலிங்க நாட்டு வேந்தன் அனந்தவர்மன். அவனுடன் குலோத்துங்கன் நடத்திய கலிங்கப்போரே சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியால் பாடப்பெற்றுச் சிறப்புற்றது. கருணாகரத் தொண்டைமான் அப்போரின் படைத் தலைவனானான். குலோத்துங்கன் காஞ்சியில் வீற்றிருந்தபோது வட கலிங்கநாட்டு வேந்தன் திறை செலுத்தவில்லை என்ற செய்தி வந்தது. அனந்தவர்மன், தன் அமைச்சன் கலிங்கராயன் போர் வேண்டாவெனத்தடுத்தும் கேளாமல் போர்தொடுத்து அனைத்தையும் இழந்தான்.

இவன் காலத்தில் ஈழநாடு உரிமை பெற்றது போலும். 1073ல் பொலனருவா, அனுராதபுரம் ஆகிய இடங்களில் ஈழப்படை சோழர் படையை முறியடிக்க, அதற்குப் பின் ஈழநாட்டில் தமிழர் ஆட்சியே இல்லையாயிற்று. இவ்வாறே கங்க நாடும் 1115க்குப் பின் உரிமை பெற்றதெனத்தெரிகின்றது. வேங்கி நாட்டில் இருந்த தன் மகன் விக்கிரமனை 1118ல் சோழநாட்டுக்கு அழைக்க, கலிங்க வேந்தன் துணைகொண்டு மேலைச்சாளுக்கியர் வேங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/251&oldid=1358944" இலிருந்து மீள்விக்கப்பட்டது