பக்கம்:தமிழக வரலாறு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

தமிழக வரலாறு



களாம். கவி குமுத சந்திரன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற திருநாராயண பட்டர் என்பவர் இவன் புகழைக் 'குலோத்துங்கசோழ சரிதை' என்ற நூலாகப் பாடியுள்ளார்.[1]

இவன் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரமேயாகும். காஞ்சிபுரமும் பழையாறையும் சில காலம் தலைநகர்களாய் இருந்தன போலும் இவன் பட்டத்தரசி மதுராந்தகி. இவள், இவன் ஆட்சியாண்டு 28இல் மறைந்திருக்க வேண்டும். பின்பு தியாகவல்லி பட்டத்தரசியாயினள். மூன்றாம் மனைவி ஏழிசை வல்லபி. இம் மூவரன்றி வேறு நான்கு மனைவியரும் இருந்தனர். இவருக்கு மைந்தர் எழுவர்; மகளிர் இருவர். அனைவரும் முதல் மனைவியின் மக்களே என்பர். அவருள் விக்கிரம சோழனே அடுத்துப் பட்டத்துக்கு வந்தவன். குலோத்துங்கன் சகோதரிகளாகிய குந்தவ்வை, மதுராந்தகி இருவரும் தில்லையில் பற்றுக் கொண்டவராகப் பல பணி புரிந்தனர். இவனுக்கு அமைச்சரும் வீரரும் பலராவர். பல சிற்றரசர் இவன் கீழ் இருந்தனர். அரசியல் அதிகாரிகளும் பலர். அவருள் கருணாகரத் தொண்டைமான் படைத்தலைவன். அப்படைத்தலைவன் புகழ் கலிங்கத்துப் பரணியில் சிறக்க நின்றுள்ளது. இப்பரணியில் கருணாகரன், குல்ோத்துங் கன் ஆகியோர் புகழ் மட்டுமன்றிச் சோழர் பரம்பரை யின் புகழும் நன்கு பேசப்பட்டுள்ளது. சோழர் பரம்பரையிலே மிகச் சிறந்த அரசராகப் போற்றப்பட்ட வருள் கடைசி அரசன் குலோத்துங்கனேயாவன். இவனுக்குப் பின்னும் இவன் பரம்பரையைச் சேர்ந்த சிலர் அடுத்த


  1. 1

1. பிற்கால சோழர் சரித்திரம், பண்டாரத்தார். பக்.50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/254&oldid=1357859" இலிருந்து மீள்விக்கப்பட்டது