பக்கம்:தமிழக வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால சோழர் எழுச்சி

253


 ஒரு நூற்றாண்டுக்குமேல் ஆண்டுவந்தார் என்றாலும் இவனை விஞ்சி நின்றவர் யாரு மிலர்.

விக்கிரமன்:

குலோங்துக்கனுக்குப்பின் பட்டத்துக்கு வந்தவன் அவன் மகன் விக்கிரமன். இவன் பரகேசரி எனப்பட்டான்; இவன் 1118 முதல் 1135 வரை ஆண்டவன்; இளமையில் வேங்கிநாட்டு அரசப் பிரதிநிதியாய் இருந்து, 1119இல் சோழநாட்டு இளவரசுப் பட்டம் எய்தித் தந்தை இறந்த பிறகு 1120இல் அரசனானவன். இவன் மூத்தோர் முன்னரே போர்களில் இறந்தனர். இவன் ஆனி மாத உத்திரட்டாதியில் பிறந்தவன். இவனுக்கு இருவகை மெய்க்கீர்த்திகள் உள்ளன. இளமையில் தென்கலிங்கப் போர் நிகழ்த்தியவன் இவன் என்று கண்டோம். 1126இல் மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் இறக்க, பின்பு வேங்கிநாடு விக்கிரமனிடம் வந்தது. இவன் சிற்றப்பன் மகா மண்டலேசுவரன் நப்பையன் அதை ஆண்டான். மைசூர்க் கல்வெட் டின் மூலம், தந்தை இழந்த கங்கபாடியின் ஒரு பகுதி யையாவது இவன் கைப்பற்றியிருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. இவன் காலத்தில் 1125இல் தொண்டை நாட்டிலும் 1128இல் சோழநாட்டிலும் வெள்ளத்தால் பஞ்சங்கள் உண்டாயின.

இவன் சிறந்த சிவபக்தன்; தில்லைக்குப் பல பணிகள் செய்துள்ளான்; பொன் வேய்ந்தான். தில்லைத் தேருக்குப் பொன் வேய்ந்து முத்துவடம் அளித்தான். பொன்கலனும் பொன் கற்பகத்தருவும் செய்தளித்தான். சிதம்பரத்தில் ‘விக்கிரமசோழன் திருவீதி' என்று ஒன்று உண்டு. இதைக் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் ஒட்டக்கூத்தர் குறிக்கின்றார். கிள்ளையில் உள்ள மாசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/255&oldid=1357873" இலிருந்து மீள்விக்கப்பட்டது