பக்கம்:தமிழக வரலாறு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

தமிழக வரலாறு



கடலாட்டு மண்டபமும் இவன் பெயரில் அமைத்ததாக வேண்டும் என்பர்.

இவன் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரமே; பழையாறை தங்குமிடமாய் இருந்தது. தில்லை, காட்டு மன்னார்கோயில் ஆகிய இடங்களில் அரசமாளிகைகள் இருந்தன. இவன் காலத்தில் போர் அதிகம் இன்மையின், நாட்டை இவன் அமைதியாக ஆண்டான். ஒட்டக் கூத்தர் இவன் அவைக்களப் புலவராய் இருந்து மூவர் உலாவைப் பாடினார்; தக்கயாகப்பரணி என்ற நூலும் பாடினார். இவன் பல தானங்கள் செய்தமையின் ‘தியாக சமுத்திரம்' என்ற சிறப்புப் பெயர் பெற்றான். இவனுக்கு முக்கோக்கிழான் அடிகள், தியாக பதாகை, நேரியன் மாதேவி என மூன்று மனைவியர் இருந்தனர். இவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன் இவனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தான். 1133இல் இளவரசுப் பட்டம் கட்டி, விக்கிரமசோழன் 1135இல் மறைந்தான் இவனும் தந்தை குலோத்துங்கனைப் போலவே பல அரசியல் அதிகாரிகளையும் வைத்திருந்தான். ஆந்திர மன்னர் உட்படப் பலர் இவனுக்குக் கப்பம் கட்டினர்.

குலோத்துங்கள்-II:

விக்கிரமன் மகன் இராசகேசரி குலோத்துங்கள்-11 கி. பி. 1133 முதல் 1150 வரை அரசாண்டான். இவன் கல்வெட்டுக்களில் அதுவரை காணாத வகையில் அரிய தமிழ் மணம் கமழ்கின்றது. இவன் காலத்தில் நாட்டில் போர் இல்லையாதலால், நல்ல அமைதி குடிகொண்டிருந்தது. இவன் முன்னோரைப்போலத் தில்லையைச் சிறப்புறச் செய்தான். தில்லையில் இவன் பெருந்தெருக்களை அமைத்தான்; பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான்; எழுநிலைக் கோபுரம் எடுப்பித்தான்; சிவகாமிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/256&oldid=1357878" இலிருந்து மீள்விக்கப்பட்டது