பக்கம்:தமிழக வரலாறு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால சோழர் எழுச்சி

257



ஒட்டக்கூத்தரே இவன் அவைக்களப் புலவர். இவன் காவிரிக் கரையில் இருந்த கேசவசாமி என்ற வட மொழிப் புலவரையும் ஆதரித்தான். அவர் அரசியல் அதிகாரிகளுள் ஒருவராய் இருந்ததுமன்றி, இவனுக்கு வடமொழி பயிற்றிய ஆசிரியராயும் இருந்தார். இவன் விருப்பப்படி வடமொழி அகராதி ஒன்றும் எழுதினார். தன் முன்னோரைப் போன்று இவனும் பல சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தான். இவனுக்கு மனைவியர் நால்வர் இருந்தனர். திருக்கோவலூர்ச் சிற்றரசன் மகள் அவனிமுழுதுடையாளே பட்டத்தரசி. ஆந்திர நாட்டிலும் தமிழ்நாட்டிலும் இவன் கீழ் அடங்கிய பல இருந்தனர். இம்மன்னன் பழையாறை மாளிகையில் நோயுற்று இறக்கும் தருவாயில் இருக்கும்போது, இவன் மைந்தர் இருவரும் ஈராண்டும் ஒராண்டும் நிரம்பிய குழந்தைகளாய் இருந்தனர். எனவே, தாயத்தாருள் ஒருவராகிய நெறியுடைய பெருமாள் புதல்வன் எதிரிலிப் பெருமாளைக் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வரவழைத்து. இளவரசுப் பட்டம் கட்டி, இவன் இறந்தான். அமைச்சர் தலைவனாகிய திருச்சிற்றம்பலமுடையான் பெருநம்பி, குழந்தைகளையும் நாட்டையும் காத்தான். பின்பு நான்கு ஆண்டுகள் கழித்து இவ்வெதிரிலிப் பெருமாள் இராசா திராசன் என்ற பெயருடன் முறைப்படி சோழப் பேரரசின் மன்னனானான்.

இராசகேசரி இராசாரோசன் —II: (1164-1178)

இராசகேசரி இராசாரோசன் 11 விக்கிரமனின் பேரன். இவன் காலத்தில் பாண்டியநாட்டில் தாயத்தார் போர்கள் நடைபெற்றன குலசேகரன், பராக்கிரம பாண்டியன் இருவரும் பட்டம் கருதிப் போரிட்டனர்.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/259&oldid=1357895" இலிருந்து மீள்விக்கப்பட்டது