பக்கம்:தமிழக வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

தமிழக வரலாறு

மகளையும் மணந்திருந்தான் இவன் இறக்கப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே 1246-ல் மகன் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டான். பலர் உரிமை பெற்ற போதிலும் ஒரு சில குறுநில மன்னர் இவன் கீழ் இருந்தனர் போலும்.

இராசேந்திரன் III

மூன்றாம் இராசேந்திரன்(1246.1279) பரகேசரி என்ற பட்டப் பெயருடன் பிறகு பட்டத்துக்கு வந்தான். இவன் பாண்டியரால் சோழருக்கு நேர்ந்த அவமானத்தை நீக்க நினைத்தான்; பாண்டியரோடு போரிட்டான். இவன் இருவர் முடித்தலை கொண்டவன் எனப்படுகிறான். சுந்தரபாண்டியன் 1238ல் இறக்க, இரண்டாம் மறவர் மன் பாண்டிய நாட்டு அரசுகட்டில் ஏறினான். இராசேந்திரன் பாண்டிய நாட்டில் படையெடுத்துச் சென்று அவனைச் சிற்றரசனாக்கினான்.இவன் வென்ற மற்றொரு பாண்டியன் குலசேகரன் எனலாம். ஆயினும் முன் சோழருக்கு உதவின போசள வேந்தன் வீர நரசிம்மன் மகன் வீர சோமேஸ்வரன் பாண்டியனுடன் சேர்ந்து சோழனை எதிர்த்தான். சோழர் தம் அகநாட்டிலேயே பலவிடங்களில் அவன் கல்வெட்டுக்கள் காணக்கிடக்கின்றன. தெலுங்குச் சோழர் உட்பட, தெலுங்குநாட்டுச் சிற்றரசர் அனைவரும் உரிமை பெற்றனர். காஞ்சிபுரமும் அதன் சுற்றுப்புறங்களும் சோழர் கைவிட்டுச் சென்றன. கண்டகோபாலன் என்ற சிற்றரசன் காஞ்சி முதல் நெல்லூர் வரை அரசாண்டான்.

விராட்சதர் வாழும் வட இலங்கையை இவன் வென்றான் என ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இவன் இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது. எனவே, ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் 'மாவிலங்கை' நாட்டை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/268&oldid=1357975" இலிருந்து மீள்விக்கப்பட்டது