பக்கம்:தமிழக வரலாறு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XIV. சோழர் காலத்துத் தமிழகம்

கி. பி (850–1270)

பாரத நாடு:

தமிழ்நாட்டு வரலாறே இப் பிற்காலச் சோழர் காலத்திலேதான் திருந்திய முறையில் அமைக்கப்பட்டது எனலாம். திரு. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் சோழர் பரம்பரையை நன்கு ஆராய்ந்து, அவர்களைப் பற்றிய குறிப்புக்களை எல்லாம் விளக்கி, இறுதியில் சோழர் காலத்தில் தமிழ்நாடு பெற்ற நன்மைகளைப் பலப்பல பகுதிகளில் விளக்கியுள்ளார். சோழர் அரசியல் முறை, நாட்டு ஆட்சி, வரியும் பொருள் வருவாயும், சமுதாய வாழ்வும் வாழ்க்கை முறையும், விவசாயம், கைத்தொழிலும் வாணிபமும், நாணயம் முதலியன, கல்வி, சமயம், இலக்கிய வளர்ச்சி எனப் பலவகையில் தனித்தனியாகப் பகுத்துக் கொண்டு சோழர் காலத்தை ஆராய்கின்றார் சாஸ்திரியார் அவர்கள் தம் பெருநூலில்[1] அவர் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து நன்கு தெளிவு படக்காட்டியுள்ளார்.

தென்னிந்தியா முழுவதும், தெலுங்கு நாடு உட்பட, இக்காலத்தில் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது எனலாம். கீழைச் சாளுக்கியர் உறவின் வழி சோழருடன் கலந்து அவர் நாட்டைப் பிணைத்துக்கொண்டனர். மேற்குக் கடற்கரையில் மங்களுரிலிருந்து கிழக்கே வந்து பின் துங்கபத்திரையை எல்லையாகக் கொள்ளின், அதைப் பெரும்பாலும் சோழநாட்டு எல்லையாகக் கொள்ளலாம் சோழர்கள் அதற்கு முன்


  1. 3. The Cholas vol. II Port I
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/270&oldid=1357999" இலிருந்து மீள்விக்கப்பட்டது