பக்கம்:தமிழக வரலாறு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

தமிழக வரலாறு



குடி இல்லை ஆனால், மாமிச உணவு படைக்கப்பட்டது போலும்! சோழர்கள் யாகத்திலும் தானமே சிறந்தது என்ற நம்பிக்கை உடையவர்கள் எனவேதான் அவர்கள் வரலாற்றில் ஒரு யாகத்தைக்கூடக் காணமுடியவில்லை. ஆனால், அவர்கள் எத்தனை எத்தனையோ தானங்களைக் கோயில்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் செய்துள்ளமையை நாம் அறிகிறோம். அரசர்கள் மட்டுமின்றி, அவர்கள் குடும்பத்தாரும் அரசியல் அதிகாரிகளுங் பலப்பல தானங்கள் செய்துள்ளார்கள். அக்கால மன்னருக்கு 'இராச குரு' என்ற அரச குரு ஒருவர் இருந்தார் எனலாம் அவர் அரசருக்கு அரச காரியங்களில் உதவினார் போலும் அரச அவைக்களப் புலவர்களும் இருந்தனர்.

கோயில்கள்:

அக்காலத்துக் கோயில்கள் சமுதாயக் குடியிருப்புக்களாய் விளங்கின. கோயில்களே மக்கள் வாழ்க்கை முறைகளை விளக்கும் நிலைக்களன்களாய் அமைந்து விட்டன. அக்கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களே அக்கால வரலாற்றை இவ்வளவு விளக்கமாக அறிய நமக்குப் பயன்படுகின்றன. மற்றும் கோயில்கள் கலை வளர்த்தன. இசையும் நாடகமும் மட்டுமின்றி இயலும் கோயில்களில் வளர்ந்தது. இசை பாடுவோரும் நடன மாடுவோருமாகக் கலை வளர்ப்பவர் பலர் இக்காலத்தில் கோயில்களில் இருந்தனர் அவருடன் தேவார முதலிய நல்ல சமய இலக்கியங்களைப் பயின்று அவற்றை முறைப்படி ஒதுவதற்காக ஒதுவார்கள் என் பாரும் இருந்து வந்தனர். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இனாம் நிலங்கள் அளித்தனர். அவை பல இடங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/272&oldid=1358018" இலிருந்து மீள்விக்கப்பட்டது