பக்கம்:தமிழக வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழக வரலாறு


பின்னுக்கு இழுப்பதும் சிலர் செய்யும் வரலாற்றுத் தவறுகளேயாகும் மேலும், ஒரு சிலர் தமக்கு வேண்டியவரை அனைவருக்கும் முன்னே வாழ்ந்தவர் என்று கொண்டு நிறுத்த முயல்வதும் வரலாற்றில் உண்டு. மணி வாசகரைத் தேவாரம் பாடிய மூவருக்கும் முற்பட்டவர் என்று கூறுபவரும் பிற்பட்டவர் என்பாரும் உள்ளனர். இது போன்ற பல கருத்துக்கள் வேறு சில நாட்டு வரலாறுகளிலும் உள்ளன என்பர். வரலாற்றை ஆராயும் நல்லாசிரியர் தத்தம் கொள்கையைப் புகுத்தாமலும், மனம் போன வழி போகாமலும், உள்ள ஆதாரங்களை வைத்துக் கொண்டு, ஓர்ந்து, கண்ணோடாது தம் நூல்களை எழுதின், அப்போது தான் உண்மை வரலாறு உலகுக்குப் புலனாகும். அதன் வழி உலகம் தன் வருங்காலத்தை உருவாக்கிக் கொள்ளும்.

தென்னிந்திய வரலாறு எங்கே?

இனி, தமிழ் நாட்டு வரலாற்றைப் பற்றிச் சிறிது காண்போம்; தமிழ்நாடு பண்டைக் காலத்தில் தனி நாடாய் இருந்த போதிலும், இன்று பரந்த பாரத நாட்டின் ஒரு சிறு உறுப்பு நாடாய் அமைந்துவிட்டது. இன்று பாரத நாட்டு வரலாற்றை எழுதுகின்ற அத்தனைப் பேராசிரியர்களும் தமிழ்நாட்டை அவ்வளவாகக் கவனிப்பதில்லை. எங்கோ ஒரு சிலர் தாம் தமிழ்நாட்டு வரலாறு பரந்த பாரத நாட்டு வரலாற்றில் முதல் இடம் பெறத்தக்க ஒன்று என்பதை உணர்ந்துள்ளனர். இந்திய நாட்டு ஆசிரியர்களில் சிலருங்கூட இந்திய வரலாறு என்றால் கங்கை சிந்து சமவெளியின் வரலாறு என்றே முடிவு கட்டி விடுகின்றனர். ‘ஸ்மித்து’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/28&oldid=1357005" இலிருந்து மீள்விக்கப்பட்டது