பக்கம்:தமிழக வரலாறு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

279



வியாபாரம் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. காசு, கழஞ்சு போன்ற சில நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. மக்கள் நலம் கருதி இலவச உணவு விடுதிகள் பல இருந்தன, பஞ்சங்களும் இல்லாமலில்லை.

விவசாயம்:

நாட்டில் பெரும்பான்மை மக்கள் விவசாயிகளே. சில தனி நிலப்பகுதிகள் தனி உடைமை பெற்றவரிடம் இருந்தன. சில பொது நிலங்களாக (Community ownership) இருந்தன. விவசாயத் தொழிலாளர் பலர் இருந்தனர். பரம்பரைக் கிராமத் தொழிலாளர் இருந் தனர். குத்தகைக்குப் பயிரிடுவோர் சாதாரணமாய் இருந்தனர் ஏழைகள் விவசாயத் தொழிலை நம்பியே வாழ்ந்தார்கள். போர் புரிவோருக்கு அளித்த இனாம் நிலங்களும் இருந்தன. தானம் வழங்கிய நிலங்கள் பலப்பல. பெரும்பாலும் பிராமணரில் ஒருவருக்கே வழங்கிய ஏகபோகக் கிராமங்களும் இருந்தன. இவைகளே பின் சுரோத்திரியக் கிராமங்களாயின என்பர். கோயில்களுக்கு விட்ட மேல்வாரக் குடிவார நிலங்களாம் தேவதான நிலங்களும் இருந்தன. இவற்றிற்கெல்லாம் அடிக்கடி பாசன வசதிகள் செப்பம் செய்து தரப் பெற்றன. காடு கொன்று நாடாக்கியும் நிலம் திருத்தி வளம் பெருக்கியும் விளைவைப் பெருக்கினர். விவசாயத்துக்கு முக்கியமான கால் நடைகளும் நன்கு போற்றிப் பாதுகாக்கப் பெற்றன.

கைத்தொழிலும் வாணிகமும்:

நாட்டின் பல ஊர்களுக்கும் வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. மலபாரிலிருந்து செங்கற்பட்டிற்குப் பக்கத்திலுள்ள திருவிடந்தைக்கு வந்து வாணி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/281&oldid=1358052" இலிருந்து மீள்விக்கப்பட்டது