பக்கம்:தமிழக வரலாறு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

285



நுசர், பெரிய வாச்சான் பிள்ளை போன்றார் வாழ்ந்த காலமும் இதுவே. பிரபந்த உரை எழுந்த காலமும் இதுவே என்பர். இராமாதுச நூற்றந்தாதி, கலித்துறை, பிரசன்ன காயத்திரி முதலிய வைணவ நூல்கள் இக்காலத்தனவே.

இலக்கியங்கள் இக்காலத்திலே வளர்ந்தள் போன்றே இலக்கணங்களும் வளர்ந்தன. அமிதசாகரர் யாப்பருங்கலமும் யாப்பருங்கலக்காரிகையும், புத்தமித்திரர் வீர சோழியமும், தண்டியாசிரியரின் தமிழ்த் தண்டி அலங் காரமும், குணவீரர் நேமிநாதமும், பவணந்தியார் நன்னூலும், நம்பி அகப்பொருளும், உரைகள் பலவும் இக்காலத்தனவேயாம்.

இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், தெய்வச்சிலையார், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களும் இக்காலத்தவர் என்பர். அனைவரும் வாழ்ந்திராவிட்டாலும், இவருள் பெரும்பாலோர் இக்காலத்தவர் எனத் திட்டமாகக் கூறலாம்.

இவ்வாறு வளர்ச்சியடைந்த தமிழ் இலக்கிய இலக்கணத்தோடு சமயத் தொடர்புடைய வடமொழி இலக்கியங்களும் அவற்றின் மொழிபெயர்ப்புக்களும் இக்காலத்தில் வளர்ந்தன எனலாம்.

மேற்கண்டவற்றால் பிற்காலச் சோழர் காலமே தமிழ் நாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய காலம் எனலாம். சங்க காலமும் பல்லவர் காலமும் பல வகையில் சிறந்தனவேயாயினும், அவற்றிற்கெல்லாம் மேலாக உலகெலாம் தமிழர் நலன், வீரம், பண்பாடு, அனைத்தையும் காட்டிச் சிறந்து விளங்கிய காலம் பிறகாலச் சோழர் காலமே என்பது தெளிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/287&oldid=1358076" இலிருந்து மீள்விக்கப்பட்டது