பக்கம்:தமிழக வரலாறு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XV. பிற்காலப் பாண்டியர்

நாட்டு நிலை-மேலைப் பகுதி பிரிந்தது:

சோழர் தம் இறுதிக் காலத்தில் வாழ்ந்த பாண்டியர் சிலரை முன்னமே கண்டோம் பண்டையர் என்னுமாறு முதன்முதல் தமிழகத்தில் தோன்றிய பாண்டியர் குடிதமிழ் வளர்த்த பேரரசர் குடி-சங்கம் புரந்த தொல் குடி-கடல்கோளுக்குமுன் மிகப்பரந்த நிலப்பரப்பாகிய நாற்பத்தொன்பது நாடுகளை ஆண்ட பாண்டியன் மாகீர்த்தி முதலாகப் பன்னெடுங்காலமாக வாழ்ந்த குடிஇடை இடையே அல்லற்பட்டு ஆற்றாது சிற்றரசாகியும் அழிந்தும் கெட்டொழிந்தது எனினும், இறுதியாகப் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடையில் வீறு பெற்று எழுந்து தமிழகத்தை ஆண்டது. முதன்முதல் தோன்றிய குடியாகிய பாண்டியர்தம் தமிழ்க்குடியே இறுதியாகத் தமிழ்நாட்டை ஆண்ட குடியாகவும் முடிந்தது. இக்காலத்தில் பெரும்பாலும் சேர நாடு பிரிந்துவிட்டது என்றே சொல்லலாம். மேலைக்கடற்கரை வழியாக மலைநாட்டில் புகுந்த ஆரியரும், கடல் வழியாக வந்த பிறரும், அவர்தம் மொழியையும் பழக்க வழக்கங்களையும் மாற்றி, அச்சேர நாட்டு மக்களைத் தம்மைத் தமிழரினும் வேறுபட்டவர் என எண்ணுமாறு செய்துவிட்டனர் எனலாம். பரசுராமன் சேரநாட்டில் வந்து தங்கிப் பின் அங்கேயே நிலைத்து மக்களைத் தன்வழித் திருப்பியதாகப் புராண வரலாறு உண்டு. பரசுராமனும் வந்திருக்கலாம்; அன்றி அவனை ஒத்த அறிவந்த ஆரியர்கள் மலை நாட்டிற்கு வந்து மக்களைத் தமிழரினின்றும் பிரித்துவிட்டனர் எனலாம். எனவே, பிற்காலப் பாண்டியர் காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/288&oldid=1358356" இலிருந்து மீள்விக்கப்பட்டது