பக்கம்:தமிழக வரலாறு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால பாண்டியர்

287


 தமிழகம் சோழ பாண்டிய நாடுகளோடு அமைந்துவிட்டது எனல் பொருந்தும்.

தமிழரைப் பழித்துரைத்தமை பொறாது இமயம் வரை படை எடுத்து வெற்றி கண்ட செங்குட்டுவனும், இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தைச் செய்தளித்த இளங்கோவடிகளும் பதிற்றுப்பத்தினைப் பெற்ற சேரர் பரம்பரையும் அவர்களைப் பாடிய பரணர் போன்ற பெரும் புலவர்களும் சங்க காலத்தில் வாழ்ந்த சேர நாடு பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு வேறாயது இடையில் சேரமான் பெருமாள் போன்ற மன்னர்களும், ஐயன் ஆரிதனார், குலசேகர ஆழ்வார் போன்ற புலவர்களும் அங்கே வாழ்ந்தார்கள். எனினும், பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் அங்குத் தமிழர் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளக் கூடிய மன்னரோ புலவரோ வாழவில்லை. மக்களும் தம்மைத் தமிழ் மக்கள் பரம்பரையினர் என்றுகூடக் கூறிக்கொள்ள மாட்டாத நிலையில் வட மொழியாலும் பிற பழக்க வழக்கத்தாலும் மாறுபட்டனர். எனவே, பிற்காலப் பாண்டியர் தம் தமிழகம் பாண்டிய சோழ நாட்டு எல்லை அளவே நின்றுவிட்டது.

சுந்தர பாண்டியன்:

சோழநாட்டில் வாழ்ந்த மூன்றாம் இராசேந்திரன் காலத்தும் அவனுக்கு முன்னும் பாண்டியர் தலை தூக்கினர் என்று கண்டோம். சுந்தரபாண்டியன் மூன்றாம் இராசராசன் காலத்தில் கிளர்ந்தெழுந்து சோழநாடு முழுவதையும் தனதாக்கிக்கொண்டு, பழையாறையில் தங்கி, பின் சிதம்பரம் சென்று, இறைவனையும் தரிசித்து வந்தான் என்று கண்டோம். அடுத்து வந்த மூன்றாம் இராசேந்திர சோழனே சோழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/289&oldid=1358363" இலிருந்து மீள்விக்கப்பட்டது