பக்கம்:தமிழக வரலாறு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலப் பாண்டியர்

289



இல்லையாகச் செல்தவன். இவன் காலத்திலே தான் மூன்றாம் இராசேந்திரன் என்ற சோழ மன்னன் இறுதியாக வாழ்ந்தான். இவனுடைய கல்வெட்டுக்கள் நாட்டின் பல பாகங்களிலும் பரவி இருக்கின்றன. இவன் காலத்திய வடமொழிக் கல்வெட்டுகளும் இருக்கின்றன எனினும், அவை வரலாற்றுக்குப் பயன்படாபோலும்! தமிழ்க்கல்வெட்டுக்களிலும் பெறும்பாலும் தனிப்பட்டோர் தானங்களைப்பற்றிக் கூறினும் அரசனது ஆட்சிப்பான்மையையும், அவன் செயலையும் குறிக்கின்ற மையால், அவை வரலாற்றுக்குப் பயன் படுவனவாகவே உள்ளன எனலாம் இவன் சேரரையும், ஹொய்சளரையும் படையெடுத்து வென்றான் எனக் குறிக்கின்றன. இவனது ஹொய்சள நாட்டுப் போரைப் பற்றிக் கல்வெட்டுக்கள் சில நன்கு குறிக்கின்றன. காவிரி பாயும் கர்நாடகத் தேசத்துச் சோமனை வென்றான் என்று ஒரு கல்வெட்டுக் குறிக்கின்றது. அப்போர் கண்ணனூர் கொப்பத்தில் நடைபெற்றதாகவும் அதில் சோமன் கொல்லப்பட்டதாகவும் பாண்டியன் வெற்றிமுரசு கொட்டிதாகவும் கூறுவர். இவன் இலங்கை நாட்டிற்கும் படை எடுத்துச் சென்று அந்நாட்டையும் தன் அடிப்படுத்திக்கொண்டான். சோழ மன்னனைச் சிறைபிடித்து வைத்திருந்த பல்லவன் கோப் பெருஞ்சிங்கனை இவன் வெற்றிகொண்டு, நடுநாட்டிலும் தொண்டை நாட்டிலும், தொல்லை உண்டாகாதவாறு பாதுகாத்தான். வாணர் தம் மகதநாடு வரை இவன் படை சென்றதாகக் கூறுவர். இந்ந நாடு இக்காலத்துச் சேலம், தென்னார்க்காட்டு வட ஆர்க்காட்டுப் பகுதிகளில் சிலவற்றை உள்ளடக்கியது என்பர்.[1] நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள். இறுதியாகச் சுந்தர பாண்டியன் விசய


  1. 1. The Pandian Kingdom, p. 167.

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/291&oldid=1358378" இலிருந்து மீள்விக்கப்பட்டது