பக்கம்:தமிழக வரலாறு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

தமிழக வரலாறு



கண்ட கோபாலனைக் கொன்று காஞ்சியைக் கைப்பற்றினான். பின் காகதீய மன்னன் கணபதியை வென்று நெல்லூரில் விஜயாபிஷேகம் செய்து கொண்டான் என்பர்.

இவன் போர்களே தமிழ்நாட்டில் பெரு மாற்றத்தை உண்டாக்கிவிட்டன எனலாம். சோழர்தம் தளர்ச்சி நோக்கித் தமிழ்நாட்டு புகநினைந்த பல வடநாட்டு மன்னருக்குச் சுந்தர பாண்டியனுடைய வீரச் செயல் இடியென விளங்கிற்று. தங்கள் எண்ணங்கள் பாழானதோடு தங்கள் நாடுகளையே இழக்கும் வகையில் அவர்கள் தம் நிலைகெட்டனர் எனலாம். சுந்தர பாண்டியன் ‘மகாராசாதிராச ஶ்ரீ பரமேச்சுரன்’ என்றும் 'எம் மண்டலமும் கொண்டருளியவன்' என்றும் புகழப்பட்டான்.

இவன் சைவ வைணவ வேறுபாடற்று இரண்டையும் ஒத்து நோக்கியவன். தில்லையில் இருந்து இறைவனைத் தரிசித்ததோடு அங்குத் துலாபாரம் புக்குப் பிராமணர்களுக்குப் பொன்னைத் தானம் செல்தான். இவன் திருவரங்கத்துக் கோயிலில் பொன் வேய்ந்த சிறப்பைப் பல கல்வெட்டுக்கள் புகழ்கின்றன. இவனைப் புலவர் பலரும் பாடியுள்ளனர் என்பர். இவன் வடமொழி, தமிழ் இரண்டையும் போற்றிப் புரந்தான் என்பது கல்வெட்டுக்கள் காட்டும் உண்மையாகும். சடையவர்மன் வீரபாண்டியன்:

இவன் தன் காலத்திலேயே தன் மகன் சடையவர்மன் வீரபாண்டியனைத் தொண்டைநாட்டுப் பிரதிநிதியாக்கி ஆளவைத்தான். எனவே, இவன் ஆட்சிக்குப் பிறகு சடையவர்மன் வீரபாண்டியனே பட்டத்துக்கு வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/292&oldid=1358410" இலிருந்து மீள்விக்கப்பட்டது