பக்கம்:தமிழக வரலாறு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

தமிழக வரலாறு



எப்படி நடைபெற்றது என்பது திட்டமாகத் தெரியவில்லை. எனினும் அக்காலத்தில் ஒருவருக்கு மேற்பட்ட மன்னர் ஆண்டதற்குச் சான்றுகள் உள்ளன. இவன் காலத்தில் மாறவர்மன் விக்கிரம பாண்டியன், சடையவர் மன் சுந்தர பாண்டியன் என்ற பெயர்கொண்ட இருவரும், சடையவர்மன் வீரபாண்டியனும் இருந்ததாகக் கூறுவர். மார்க்கபோலோ கூறுவது போன்றே ஒரு சீனக் குறிப்பு பாண்டிய நாட்டில் ஐந்து சுல்தான்கள் ஆண்டனர் என்கின்றது. இசுலாமிய வரலாற்று யாத்திரிகனான 'வாசப்[1] என்பவன் இன்னும் சற்று விளக்கமாக குறித்துள்ளான். சுந்தரபாண்டியனுடைய மூன்று சகோதரர்கள் உரிமை பெற்று அரசாண்டார்கள் என்பதே அக்குறிப்பு. இப்படிப் பலவகையில் பாண்டியன் உரிமை பெற்று வாழ்ந்தார்கள் எனக் கூறுவது ஒரளவில் பொருந்துமேனும், மாறவர்மன் குலசேகரனே அனைவருக்கும் மேலாகச் சிறந்த பாண்டிய மன்னனாய் வாழ்ந்தவன் மற்றவர்கள் அவனால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளாகவோ அன்றிச் சிற்றரசர்கள் போன்றோ வாழ்ந்திருந்தார்கள் என்று கொள்வதுதான் பொருத்தமுடையது. இக் குலசேகரன் ஈழநாட்டின் மேலும் படை எடுத்தான் என அறிகின்றோம். ஈழமன்னனைத் தோற்கடித்து, புத்தர்தம் பல்லுடன் இவன் மீண்டான். அக்காலத்தில் ஈழநாட்டில் மூன்றாம் பராக்கிரமபாகு ஆண்டிருந்தான். அவனை வென்று வந்த படைத்தலைவன் பெயர் ஆரியச் சக்கரவர்த்தி என்பதாகும்.

அரசியல் திரியும் அயலார் நுழைவும்:

இம்மன்னன் காலத்தில் நாடு நன்கு செழிப்புற்றிருந்தது. அயலார் யாரும் இந்நாட்டில் படை எடுக்கவில்லை.


  1. I. Wassaf,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/294&oldid=1358434" இலிருந்து மீள்விக்கப்பட்டது