பக்கம்:தமிழக வரலாறு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலப் பாண்டியன்

293



இவனும் பெரும்போர் ஒன்றும் செய்யவில்லை. எனவே, போரற்று மக்கள் அமைதியில் வாழ்ந்தார்கள். ஆயினும், தஞ்சைக் கல்வெட்டுக் ஒன்று (34 ஆம் ஆட்சியாண்டு) அக்கல்வெட்டுக் காலத்தில் குழப்பம் இருந்ததெனக் குறிக்கிறதாம். அது ஒரு வேளை அப்பகுதி குலசேகரனால் அவன் தம்பிக்குப் பிரித்துக் கொடுத்த காலத்தில் நடைபெற்றதாக இருக்கவேண்டும். இவன் ஆட்சி ஆண்டு எல்லையிலே நின்று ஆண்டவன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் எனக் கண்டோம். இவனுக்குப் பின் அச்சுந்தரபாண்டியனே பாண்டிநாட்டை ஆண்டான் என்பர். அவன் கி. பி. 1276 முதல் 1293 வரை கொங்கு நாட்டின் பிரதிநிதியாயும் இருந்தான் என்பர். சடிலவர்மன் மற்றொரு மன்னனாய் வாழ்ந்திருக்கிறான். இவர் இருவரும் குலசேகரன் மக்களாவர். இவ்விருவரையும் பற்றி இசுலாமிய வரலாற்றாசிரியன் நன்கு விளக்குகிறான். இவர்களுடைய ஆட்சி யாவும் கி,பி 1310க்குப் பின் சிறக்கவில்லை எனலாம். சிறு சிறு எல்லைகளோடு பாண்டியர்கள் அதற்குப் பின்னும் பதினாறாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தாரேனும் அவர்களெல்லாரும் சிறக்க வாழ்ந்தாரில்லை.

மற்றோர் இருண்ட காலம்:

தமிழ் நாட்டில் இதுவரை கேள்விப்படாத வகையில் புதுப் படை எடுப்புக்கள் நடைபெற்றன. அடுத்ததோர் இருண்ட காலமோ என்னுமாறு ஒரு நூற்றாண்டுக்கு மேல் வரையறுக்க முடியாத வகையில் புதுப்படை எடுப்புக்கள் நடைபெற்றன: குழப்பமான நிலைமை நாட்டில் இருந்து வந்தது எனலாம். மாறவர்மன் குலசேகரன் 11 கி.பி. 1314 லிலும் அதற்குப் பின் சடையவர்மன் பராக்கிரமன் (1315-1347)என்பானும் இருந்திருக்கிறார்கள் மாறவர்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/295&oldid=1358437" இலிருந்து மீள்விக்கப்பட்டது