பக்கம்:தமிழக வரலாறு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலப் பாண்டியர்

295



மக்களும் வாழ்விழந்து வலுவிழந்து நாட்டைவிட்டு ஒடின பிறகு நாட வந்தவருக்கு வேலை என்ன? இக்காலத்தில் நடந்த இக்கொடுமைகளை எல்லாம் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களோ அல்லது இலக்கியங்களோ குறிக்கவில்லை. இலக்கியம் பாடிக்கொண்டிருக்க எந்தப் புலவன் எந்த அரசவையில் அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்? எந்த அரசன் தன் வீரப்பிரதாபங்களைக் கல்வெட்டில் பொறிக்க ஆணையிட்டிருக்கக்கூடும்? பாவம்! தமிழ்நாடு இப்படித் தன்னிலை இழந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டதாயிற்று. முன்னைய இருண்ட காலத்தில் பிறநாட்டுச் சமயங்களும், அவற்றை வளர்ப்பவர்களும், கொள்கையைப் புகுத்தினவர்களுமாக வந்து அமைதியாகப் புரட்சி செய்து மக்கள் நிலையை மாற்றிவிட்டார்கள். ஆனால். இந்தப் பதினான்காம் நூற்றாண்டில் மாலிக்கபூரின் படை எடுப்பும் இசுலாமியர் மாறுபாடுகளும் நாட்டை உருக்குலையவைத்தன எனலாம்.தனக்கு ஆட்சி வேண்டிய தற்காக மாற்றானை வலிய அழைத்து வந்த சுந்தர பாண்டினே, தன்னாடு இவ்வாறு அழிக்கப் பெற்று நிலை குலைந்து கெட்டு இருந்ததைக் கண்டு வந்தியிருப்பான் என்பது திண்ணம்.

இசுலாமியர் நுழைவு:

மாலிக்கபூருக்குப்பின் பல இசுலாமியர் தமிழ்நாட்டினுள் நுழையலாயினர் அல்லாவுதீன் உடான்ஜி, குத்புதீன் சியாகதீன், அடில்ஷா பக்ருதீன், முபாரக்ஷா, அல்லாவுதீன், சிக்கந்தர்ஷா போன்ற பலர் தமிழ்நாட்டில் நுழைந்தனர். அக்காவத்தில் அரசர் என்று சொல்லக் கூடியவகையில் பாண்டியர் இருந்தாரேனும் அவரும் நிலைத்து ஓரிடத்தில் வாழவில்லை எனலாம். சிலர் ஒடி ஒளிந்து வாழ்ந்தனர். சிலர் திருவாங்கூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/297&oldid=1358443" இலிருந்து மீள்விக்கப்பட்டது