பக்கம்:தமிழக வரலாறு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

தமிழக வரலாறு



கொல்லம் பகுதிகளில் சென்று பேருக்கு அரசராய் வாழ்ந்து வந்தனர். வீரபாண்டியன் ஆட்சியில் வடக்கிருந்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா மதுரைலைக் கைப்பற்றி இசுலாமியர் ஆட்சியைத் தொடங்கிவிட்டான். இவ்வாறு பாண்டி நாட்டில் இசுலாமியர் ஆட்சி கி.பி. 1330-முதல் 1378வரை சுமார் அரை நூற்றாண்டு நடைபெற்றது எனலாம். இவ்வாறு நாட்டின் மேல் படை எடுத்து வந்த இசுலாமியர் மற்ற மன்னர்கள் செய்தமை போன்று வெற்றி கொண்ட நாட்டை அமைதியாக ஆளவில்லை. அவர்கள் பல கோயில்களைக் கொள்ளை இட்டார்கள். பிற சமயத்தவரைத் தொல்லைக் குள்ளாக்கினர் இந்த இடைக்கால இசுலாமியர்கள் தங்கள் ஆட்சிக்குள் சில கல்வெட்டுக்களை வெட்டி வைத்தனர்; நாணயங்களையும் உண்டாக்கினர். இக்காலத்தில் பொதுவாக நாட்டின் சமயநிலை அழிந்ததோடு அமைதியும் நிலைகுலைந்தது எனலாம்.

இவ்வாறான அவல நிலையைக் கண்டு கொண்டே சில பாண்டியர்கள் ஆண்டார்கள் என்றாலும் அவர்களால் இசுலாமியரை ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர்கள் மதுரையிலேயே இல்லை; சிதறி ஓடினர். சிலர் திருநெல்வேலியிலும் சிலர் திருவாங்கூரிலுமாக மூலை முடுக்குகளில் இருந்து வாழ்ந்து வந்தனர். இவ்வாறு பாரெலாம் போற்ற ஆண்ட தமிழரசர் பரம்பரை. பல் வேறுவகையில் சிதறுண்டு, கடையில் அழிந்தது.

புதிய பரம்பரைகள்:

எனினும், இசுலாமியரை எதிர்த்து மத்திய இந்தியாவில் ஒர் இந்து அரச பரம்பரை புதிதாகத் தலைஎடுத்தது. அதுலே விசயநகர வேந்தர் பரம்பரையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/298&oldid=1358445" இலிருந்து மீள்விக்கப்பட்டது