பக்கம்:தமிழக வரலாறு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலப் பாண்டியர்

297


பரந்த இந்தியநாடு முழுவதும் இசுலாமியர் செய்துவந்த செயல்களைக் கண்டு வருந்திய பரம்பரைகள் இரண்டு. இரண்டும் மத்திய இந்தியாவில் தோன்றின. அவற்றுள் ஒன்று மத்திய இந்தியாவின் மேற்குப் பகுதியில் வளர்ந்த மாரட்டின வமிசம்; மற்றது, விசயநகரப் பரம்பரை இவை இரண்டிற்கும் தமிழ் நாட்டின்மேல் பற்றில்லையேனும், அந்நாட்டில் இசுலாமியர் செய்யும் கொடுமைகளை ஒழித்து, இந்து சமயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று எண்ணின; எண்ணி, ஒன்றபின் ஒன்றாகத் தமிழ்நாட்டில் புகுந்தன. விசயநகர வேந்தனான குமாரகம் பண்ணன் 1363ல் தமிழ் நாட்டின்மேல் படை எடுத்து வந்தான்; அவன் படை எடுப்பு இசுலாமிய ஆட்சியைக் குலைத்தது. விசய நகரப் படையெடுப்பால் தமிழ்நாட்டில் மறுபடியும மக்கள் கிளர்ந்தெழுந்தனர். பின்னர் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மறுபடியும் இசுலாமியர்களும் அவர்களை ஒட்டி மேலை நாட்டினரும் தமிழ் நாட்டில் படை எடுத்து வந்தாரேனும். விசயநகர வேந்தரும், மராட்டிய மன்னரும் அதன் இடையில் தமிழ் நாட்டுக்குச் செய்த தொண்டுகள் பல. அவற்றை அடுத்துக் காண்போம்.

திரும்பவும் சிறிது அமைதி:

இசுலாமியராட்சி முறியடிக்கப்பட்ட பின் திரும்பவும் பாண்டியர்கள் சிற்றரசர்களாகச் சாதாரண வகையில் வாழ்ந்தார்கள். இவருள் சிலர் விசயநகர வேந்தர் ஆட்சியின் கீழும் இருந்திருக்கலாம் அவர்களைப் பற்றி ஒன்றும் அதிகம் தெரியவழியில்லை. எனவே, அவர்கள் பெயரை மட்டும் கண்டு மேலே செல்லலாம். அவர்கள் பெரும்பாலும் திருநெல்வேலியிருந்து தென்பாண்டி நாட்டினை மட்டும் ஆண்ட காரணத்தால் அவர்கள் நெல்லைப் பாண்டியர் எனவே வழங்கப் பெற்றனர்.

இறுதி பாண்டியர்: சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி பி. 1422 வரை ஆண்டான். அடுத்து அழகன் பராக்கிரமன் கி.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/299&oldid=1376166" இலிருந்து மீள்விக்கப்பட்டது