பக்கம்:தமிழக வரலாறு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

தமிழக வரலாறு



இடங்களையும் கைப்பற்றிக்கொண்டு கோட்டை கொத்தளங்கள் அமைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் இசுலாமியராட்சி பரவாத வகையில் முயன்றார்கள். அதைப் போன்றே புக்கர், ஹரிஹரர் என்பவரால் தோற்றுவிக்கப் பெற்ற விசநகரத்தாரும் தெற்கே தம் ஆதிக்கத்தைச் செலுத்தி, கன்னியகுமாரி வரையில் ஆண்டார்கள். மராட்டியர்கள் பெரும்பாலும் விசயநகர வேந்தருக்கு அடங்கியே இருந்தார்கள் எனலாம். தஞ்சையிலும் செஞ்சியிலும் வாழ்ந்த மராட்டியர் சிறிது உரிமை பெற்றிருந்தபோதிலும், தஞ்சை மராட்டியர் விசயநகர வேந்தர் பிரதிநிதிகளாய் இருந்த நாயக்கருக்கும் மற்றவருக்கும் உட்பட்டே இருந்தார்கள் என்பர். இவ்விரு பரம்பரையினரும் தமிழ் நாட்டை ஆண்டதால் இசுலாமியர்தம் படை எடுப்புக்கள் ஒரளவு குறைந்தன வென்றாலும், தமிழ்ப் பண்பாடு வளரவில்லை எனலாம். இரு பரம்பரையினரும் வடமொழி, தெலுங்கு ஆகியவற்றை வளர்த்தார்களேயன்றி. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கருத்திருத்தினார்கள் இல்லை. இவர்கள் காலத்தில் தமிழ்நாட்டிலும் பாளையங்கள் போன்ற சிற்சில சிற்றரசு கள் தோன்றலாயின இக்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டார்கள் பலராயினமையின், ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியே காணுதல் என்பது இயலாது. மராட்டியருள்ளும் விசநகரத்தாருள்ளும் சிற்சிலரைப் பெயளவில் கண்டு, மேல் அவர்கள் காலத்தில் தமிழ் நாடு இருத்த நிலையினைக் காணலாம்.

விஜயநகர வேரந்தரும் மராட்டியரும்:

மத்திய இந்தியாவில் பாமினிச் சுல்தான்களுடைய ஆட்சியின் தொல்லையே விசயநகரப் பேரரசை வளர்த்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/302&oldid=1358465" இலிருந்து மீள்விக்கப்பட்டது