பக்கம்:தமிழக வரலாறு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

தமிழக வரலாறு



னார்க்காட்டு- மாவட்டக் கல்வெட்டுக்கள் இரண்டு[1] ஒர் உண்மையைக் காட்டுகின்றன. புது மன்னர் பட்டத்துக்கு வரும்போது அமைச்சர்கள் மக்களிடத்திலிருந்து வற்புறுத்திப் பல பொருள்களைப் பறித்ததாகவும், மக்கள் தாங்காது வெளி இடங்களுக்குச் செல்ல, அரசன் அறிந்து தக்க நடவடிக்கை எடுத்து மக்களைக் காத்ததாகவும் கூறுகின்றன. விசயநகர வேந்தர்கள் மக்கள் பொருளாதார நலங்கருதிக் காடுதிருத்தியும் குளம் வெட்டியும் பிற் வகையிலும் உழவுத்தொழிலை வளர்த்து வந்தனர். இவர்கள் நாட்டில் இருந்த சட்டங்களைக் கெடா வகையில் பாதுகாத்து நீதியும் நேர்மையும் நிலவச்செய்தனர். ஒவ்வொரு சாதியும் தத்தமக்கெனச் சட்டங்களை வரையறுத்துக்கொள்ள அவற்றைச் செயல்படுத்துவது அரசனுடைய கடமையாயிற்று.[2]

அரசனுக்கு உடன் துணையாக உயரிய சபை ஒன்றும் இருந்தது. அது அரச காரியங்களை நன்கு கவனித்துக் கொண்டு சிறந்த துறையில் அரசனுக்கு உதவி வந்தது எனலாம். அமைச்சர்களும் உன் கூட்டத்து அதிகாரிகளும் அதில் அங்கம் வகித்தனர் அமைச்சராவதற்குப் பல தகுதிகள் இருந்தனவாம் வயதும் குறித்திருந்தார்கள் போலும் அமைச்சராவோர் சிறந்த அறிஞராக, அரச நெறி அறிந்தவராக, அதர்மத்துக்கு அஞ்சுபவரான, ஐம்பதுக்கு மேல் எழுபதுக்குள் வயதுடையவராக, நல்ல உடல் உரப் பெற்றவராக, வழிவழி அரசியல் தெரிந்த


  1. 1. Administration & Social Life under the Vijayanagar Empire by Dr. Mahalingam, p 19
  2. 2. lbid, p. 22 & 23; வடஆற்காடு மாவட்ட விரிஞ்சி புரக் கல்வெட்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/306&oldid=1358643" இலிருந்து மீள்விக்கப்பட்டது