பக்கம்:தமிழக வரலாறு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

305


குடியினராக இருத்தல் வேண்டும்[1]. சோழர் பாண்டியர் காலத்தில் இருந்தமை போன்று இவர்கள் காலத்திலும் பல அரசியல் அதிகாரிகள் இருந்தார்கள். திருமத்திர ஒலை நாயகம் போன்று பல அலுவலர்கள் அரசியல் காரியங்களைக் கவனித்து வந்தார்கள். மதுரையில் வாழ்ந்த நாயக்க மன்னர்கள் தங்களைப் பாண்டியர் பரம்பரையினர் எனக் கருதி வாழ்ந்தமையின், பாண்டியர் தம் அரசாட்சி முறையினையே கையாண்டார் எனலாம்.

வரிகள்:

விசயநகர வேந்தர் காலத்து வரிகள் மிக அதிகமாக இருந்தன என்பர். கல்வெட்டுக்களும் பிறநாட்டார் குறிப்புக்களும் இக்காலத்தில் இருந்த வரியின் வகைகளையும் விளைபொருளில் பாதி அளவுக்கு வரி பெற்றமையையும் குறிக்கின்றன.

நிலவரி, சொத்துவரி, வாணிபவரி, உத்தியோகவரி, கைத்தொழில்வரி, சேனைப் பாதுகாப்புவரி, பொதுநலவரி போன்ற வரிகளும் அபராதத் தொகைகளும், பிற வருமானங்களும் அரசனுடைய பண்டாரத்தை நிரப்பின எனலாம்.[2] நிலவரி பலவகைப்பட்டிருந்தது நன்செய், புன்செய் நிலங்களுக்குத் தனித்தனி வரிகள் இருந்தன. கி. பி. 1673-74ல் உண்டான பட்டயத்தின் வழி ஒரு கலத்துக்கு ஒரு நாழி பெற்றதாக அறிகிறோம். நிலத்தைப் பல்வேறு வகையாக அளந்து தரத்துக்கு ஏற்ப வரி விதித்தார்கள். தென் ஆர்க்காடு மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் 1504-05ல் 34 அடி கொண்ட ஒர் அளவுகோல்


  1. 1. Administration & Social Life under Vijayanagar Empire, p. 30
  2. 2. வடஆர்க்காடு மாவட்ட விரிஞ்சிபுரக் கல்வெட்டு 20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/307&oldid=1358645" இலிருந்து மீள்விக்கப்பட்டது