பக்கம்:தமிழக வரலாறு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

தமிழக வரலாறு


இருந்ததாக அறிகிறோம்.[1] திருநெல்வேலி மாவட்டச் சேரன்மாதேவிக் கல்வெட்டால் (1550–51) விசுவநாத நாயக்கர் காலத்தில் மக்களால் இயலாத காரணத்தால், பல வரிகள் தள்ளப்பட்டன என அறிகிறோம்[2] சொத்து வரியை நகரங்களில் அதிகமாயும் பிற இடங்களில் தகுதிக்கு ஏற்பவும் வசூலித்ததாக அறிகின்றோம். இவர்கள் காலத்தில் திருமணத்துக்கென வரி இருந்ததாம். அது சோழர் காலத்திலும் இருந்ததெனத் திரு. மகாலிங்கம் அவர்கள் குறிக்கின்றார்கள்.[3] மண ஊர்வலம், பந்தல் முதலியவற்றிற்கும் வரி இருந்ததாம். எனினும், விசயநகர ஆட்சியிலும் சரி, சோழர் ஆட்சியிலும் சரி இம் மணவரியை மக்கள் விரும்பியிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

வரியினைப் பெரும்பாலும் கிராம எல்லையிலேயே வசூலித்தார்கள். தனி மனிதனிடம் வரிவசூலிக்கும் வழக்கம் அக்காலத்தில் இல்லை எனலாம். பொதுவாகக் கிராமத்துக்கு இவ்வளவு என்று கண்டு மொத்தமாக வரி வாங்குவார்கள். செங்கற்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டங்களில் அக்காலத்திய கல்வெட்டுக்கள் வரிகள் பொன்னாகவும் பொருளாகவும் வாங்கப்பட்டதைக் குறிக்கின்றன. புதியனவாக நீர்ப்பாசன வசதிகள் செய்தால், அவற்றிற்காகத் தனி வரி இட்டு வசூல் செய்து அதைப் பொதுநலத்துக்குப் பயன்படுத்துவார்கள் போலும்! இக்குறிப்பை ஸ்ரீபெரும்பூதூர்க் கல்வெட்டு ஒன்று காட்டுகிறது.[4] அக்காலத்துக் கிராமச்சபைகளே பெரும்பாலும் வரி வசூலிக்-


  1. Administration & Social Life under Vijanagar Empire p.47
  2. Administration & Social Life under Vijanagar Empire p. 55
  3. Administration & Social Life under Vijanagar Empire p. 69
  4. Administration & Social Life under Vijanagar Empire p. 75
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/308&oldid=1359195" இலிருந்து மீள்விக்கப்பட்டது