பக்கம்:தமிழக வரலாறு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

307


கும் பொறுப்பை ஏற்று, வசூலித்த தொகையை அரசாங்கத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தன. அக்காலத்தை ஒட்டிய மராட்டியர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கிராம முனிசீபு, கர்ணம் அமைப்பு முறையே பெரும்பாலும் மாறாமல் இன்றளவும் வழக்கத்தில் இருந்துவருகின்றது எனலாம்.

வெள்ளத்தால் அழிவு நேரினும், வேறுவகையால் விளைவு குன்றினும் வரி கழிப்பு உண்டு என்பது தெளிவு. தஞ்சை மாவட்ட வழுவூரில் 1402-03ன் குறிப்பு ஒன்று இவ்வுண்மையை வலியுறுத்துகின்றது.[1] வரியைச் சில விடங்களில் வற்புறுத்தி வாங்குவதும் உண்டுபோலும். திருச்சி மாவட்ட ஆடுதுறை கல்வெட்டு ஒன்று, மக்கள் வரி கொடுக்கலாற்றாது நின்ற நிலையையும், பின் அதை வாங்கச் செய்த வகையையும் காட்டுகின்றது. சிலர் வரியினைக்கட்டவகையற்றுத் தம் நிலங்களையே விற்பார்கள் எனவும் காண்கின்றோம். பொதுவாகக் கல்வெட்டுக்களாலும், வெளிநாட்டார் குறிப்புக்களாலும் விசயநகரவேந்தர் காலத்தில் தமிழ் நாட்டில் வரிவிதிப்பு அதிகமாகவே இருந்ததென்பதை நிச்சயமாக உறுதி செய்யலாம்.

நீதிப் பாதுகாப்பு:

அரசர்கள் நாட்டில் குற்றம் வராமல் பாதுகாத்தார்கள்; வந்தாலும் தடுத்துத் தண்டம் செய்து நீக்கவும் வகை கண்டார்கள். உரிமை, குற்றம் என்ற வேறுபாடு இக்காலத்திலும் வழக்கில் உள்ளது எனலாம். அவற்றின் விரிவுகளும், ஆய்வு முறைகளும், தீர்வுகளும் காணின் பெருகும். திருக்கழுக்குன்றக் கல்வெட்டு ஒன்று பொன் திருடிய ஒருவனுடைய


  1. Administration & Social Life under Vijayanagar Empire p. 83
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/309&oldid=1376161" இலிருந்து மீள்விக்கப்பட்டது