பக்கம்:தமிழக வரலாறு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

311



காவலருக்கு உரிமை அளித்தனர், கோயில்கள் மருந்தகங்களை வைத்து நடத்தினதாகவும் அறிகிறோம். கிராம மக்கள் சிறுதொழில் பயிலவும் கோயிற்பொருள் பயன்பட்டது செங்கற்பட்டு மாவட்டம் பெருநகர், மானாமதி கிராமங்களில் அவற்றுக்குச் சான்றுகள் உள்ளன.[1] இவ்வாறு கோயில்கள் தொழும் இடமாக மட்டும் இல்லாது, மக்கள் பொதுவாழ்வு மலரத்தக்க வகையில் உதவிபுரியும் நல்லதொரு நடு இடமாகவும் இருந்தது போற்றத்தக்கது.

சாதி வேறுபாட்டு உணர்ச்சி:

இக்காலத்தில் சாதிகள் வளர்ந்துவிட்டன எனக் கண்டோம். அச்சாதிகளின் பெயராலேயே மக்களை வழங்கும் பழக்கம் வந்துவிட்டது. முதலியார், நாயுடு, செட்டியார், ரெட்டியார் என்பன போன்றே சாதிப் பெயர்களைத் தம் பெயர்களின் கடைசியில் சேர்த்து வழங்குவதே பெருமை என்னும் நிலை ஏற்பட்டது. நால்வகை வருணங்களைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆயிரக்கணக்கான சாதிகளை வளர்த்தனர் விசயநகரப் பரம்பரையினர். அந்தச் சாதிகளில் பிராமணர்களே அனைவரினும் மேலானவர்களாகச் சிறந்து விளங்கினர். அரசர்கள் பிராமணர்தம் வாட்டங்கண்டு சகியாது பலப் பல தான தருமங்களைச் செய்தனர்; பல கிராமங்களை வரிஇலா நிலங்களாக்கி அவர்களுக்கு அளித்தனர்; தம் அரச அவையில் அவர்களை முக்கிய அங்கம் வகிக்கச்செய்தனர். இப்படிப் பலவகையிலும் சமுதாயத்துறையில் பிராமணர்களே ஏற்றம் பெற்று நின்றனர் எனலாம். இக்காலத்தில் மேற்கண்ட முதலியார், ரெட்டியார் முதலிய சாதிகளைத் தவிர்த்து, அம்பட்டர், கைக்கோளர் போன்ற தொழில் பற்றிய சாதிகளும் வளர்ந்து விட்டன. இவைகளைத்


  1. 1. Administration & Social Life under Vijayanagar Empire p. 228
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/313&oldid=1358692" இலிருந்து மீள்விக்கப்பட்டது