பக்கம்:தமிழக வரலாறு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

தமிழக வரலாறு


தவிர்த்து வலங்கை இடங்கைச் சாதிகள் பெருகின. அவருள் வலங்கையார் விவசாயத் துறையில் உள்ளவராகி விவசாயிகளுக்கு உதவுபவராயும், மற்றவர் வாணிபம் கைத்தொழில் துறையில் உதவுபவராயும் அமைந்து விட்டனர் எனலாம்.[1]

பழக்க வழக்கங்கள்:

திருமணத்தில் சீதனம் கொடுக்கும் வழக்கமும் கன்னிகாதான முறையும் பெருகிவிட்டன. தமிழ்நாட்டுக் காதல் முறை போய், கன்னிகாதான முறை குடிபுகுந்தது. சீதனமாகப் பொன்னையும் பொருளையும் தவிர்த்து நிலங்களையும் அளித்து வந்தனர். அவ்வாறு நிலம் அளிப்பதால் நிலம் சிதறுண்டு போவதைத் தடுக்க, செங்கற்பட்டு மாவட்டம் மாங்காட்டுக் கிராமத்தில் மக்கள் தமக்குள் ஒருமுடிவு செய்து கொண்டார்கள் எனத் தெரிகிறது, கணவனோடு ஒருங்கே உயிர் துறக்கும் சதியை மக்கள் பொது விதியாகக் கொள்ளவில்லை என மேலே கண்டோம். பெண்கள், வாழும் சமுதாயத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர். பிராமணர் அழகிய மனைவியரை மணந்து கொண்டு வாழ்ந்தனர் என வெளி நாட்டார் குறித்துள்ளனர். பொதுவாகவே தமிழ்நாட்டுப் பெண்கள் அழகாய் இருந்தனர். அரசர்கள் பல மகளீரை மணந்து கொண்டனர். பலதார மணம் அன்று மற்ற மக்களிடமும் சாதாரணமாய் இருந்தது. பல மனைவியர் அரண்மனையில் பணியாற்றினர் எனலாம். பெண்கள்


  1. l. Administration & Social Life under Vijayanagar, Empire p. 251
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/314&oldid=1358702" இலிருந்து மீள்விக்கப்பட்டது