பக்கம்:தமிழக வரலாறு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

317


நினைத்தபடி அத்துணை விரைவில் பெருமளவில் மக்களைக் கிறித்தவராக்க முடியவில்லை எனலாம்.

இசுலாமியர் நுழைவுடன் அவர் தம் சமயமாகிய இசுலாமும் வந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. இசுலாமிய மன்னருக்கு எதிராக விசயநகரவேந்தர் எழுந்தாரேனும், அவருள் சிலர் இசுலாமிய மதம் வளர்வதற்குத் தம் நாட்டிலே இடங்கொடுத்தார்கள் என்றே தெரிகிறது. இரண்டாம் தேவராயர் அவருள் ஒருவர். சில அரசியல் அதிகாரிகளும் இசுலாமியராய் இருந்தனர் என அறிகிறோம். எனவே இசுலாமிய மதமும் தமிழ்நாட்டில் பரவி வளர்ந்தது என்பது தேற்றம். விசயநகரவேந்தர் பரம்ப ரையினர் முதலில் சைவராய் இருந்து, பின் வைணவராயினர் ஆயினும் பெரும்பாலோர் வைணவராகவே இருந்ததால் அவர் காலத்தில் தமிழகத்தில் வைணவம் சிறந்து பரவும் வசதிபெற்றது எனலாம். இத்தகைய பெருந்தெய்வங்களைத் தவிர்த்து, கிராமங்களில் இப்போது காணப்பெறும் கிராம தேவதைகளும் வேறு பல சிறு தெய்வங்களும் போற்றப்பட்டு வந்தன. அரசமரத்தையும் வேம்பினையும் பிணைத்து, கீழ் நாகப்பிரதிட்டை செய்து வழிபடும் வழக்கம் இக்காலத்தில் அதிகமாக வளர்ந்து வந்தது எனலாம். இக்காலத்திலேயே சமயம் வளர்க்கும் பல மடங்களும் தோன்றி வளர்ந்தன.

கல்வியும் இலக்கியமும்:

சமயத்துறை இவ்வாறாக, இக்காலத்தில் கல்வியும் இலக்கியமும்கூட நன்கு வளர்ந்தன எனலாம். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையில் கல்வித் துறை அனைத்தும் தனியார் வசமே ஒப்படைக்கப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/319&oldid=1376152" இலிருந்து மீள்விக்கப்பட்டது