பக்கம்:தமிழக வரலாறு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

தமிழக வரலாறு


இருந்தன.[1] பண்டைத் தமிழ் வளர்த்த சங்கம் இருந்த இடமாகிய மதுரை, நாயக்கர் காலத்தும் தமிழ் வளர்த்துக் கலை போற்றும் இடமாகவே இருந்தது. நொபிலி என்பவர். கி. பி. 1610ல் மதுரையில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர் பல பேராசிரியர்களிடம் பயின்று வந்தனர் எனக் குறிக்கின்றார். கோயில்களிலும் சமயக் கல்வி நன்கு கற்றுத்தரப்பட்டது.

தமிழ் இலக்கியம் இக்காலத்தில் வடமொழி, தெலுங்கு கன்னட இலக்கியங்களோடு சிறக்க வளர்ந்தது எனலாம். தமிழ்நாடு விசயநகர வேந்தர் காலத்தில் அமைதியாய் இருந்தமையின் இக்காலத்தில் கலையும் இலக்கியமும் நன்கு வளர வாய்ப்புக்கள் இருந்தன. கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் சிற்றம்பலநாடிகள் என்ற புலவர் வாழ்ந்திருந்தார். இரட்டையர் எனப்படும் முது சூரியர், இளஞ்சூரியர் என்பவரும் காளமேகப் புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தவர்களே. பதினாறாம் நூற்றாண்டில் பல்வேறு புலவர்கள் வாழ்ந்து இலக்கியத்தை வளம் பெறச் செய்துள்ளனர். சிறப்பாகக் கிருஷ்ணதேவராயர் காலத்தில் புலமை நன்கு போற்றப்பட்டது. சிதம்பரத்தில் திருமலைநாதர் என்ற புலவர் வாழ்ந்திருந்தார். அவர் சிதம்பர புராணம், மதுரைச் சொக்கநாதர் உலா என்ற நூல்களை இயற்றினார். அவர் மகனார் பரஞ்சோதியார் சிதம்பரப் பாட்டியல் என்ற நூலை இயற்றினார். இக் காலத்தில் தல புராணங்கள் அளவுக்கு மீறிப் பெருகின எனல் பொருந்தும். பாகவதம் பாடிய செவ்வைச்சூடு வாரும் இக்காலத்தவரேயாவர். சிறந்த புலவராகிய தத்துவராய சுவாமிகள் திருவாருரில் வாழ்ந்திருந்தனர்


  1. 1 & 2, Administration & Social Life under Vijaya nagar Empire p. 350
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/320&oldid=1359175" இலிருந்து மீள்விக்கப்பட்டது