பக்கம்:தமிழக வரலாறு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்


சைவப்பிரகாசம் என்ற தத்துவநூலை இயற்றியவர் இவரே. இரு சமய விளக்கம் என்னும் நுாலை எழுதிய வைணவ ஹரிதாசர் இக்காலத்தில் அரசியல் அதிகாரிகளுள் ஒருவராய் இருந்தார். கச்சிக் கலம்பகம் பாடிய ஞானப்பிரகாசர் இக்காலத்தில் காஞ்சியில் வாழ்ந்தவர் என்பர். சூடாமணி நிகண்டின் ஆசிரியராகிய மண்டல புருடர் இக்காலத்தில் வாழ்ந்தவர் என்பர். தீர்த்தங்கரர்களைப் பற்றிய நுாலும் இவர் எழுதியுள்ளார். சித்தாந்தம் போற்றிய சிதம்பரம் மறைஞான சம்பந்தரும் இக்காலத்தில் வாழ்ந்தவரே. சூரியனார் கோயில் சிவாக்கிர யோகியரும், கமலை ஞானப்பிரகாசரும், குருஞான சம்பந்தரும், நிரம்ப அழகிய தேசிகரும் இக்காலத்தவர்களே நைடதம் பாடிய அதிவீரராம பாண்டியர் விசய நகர வேந்தரின் கீழ்ச் சிற்றரசராய் இருந்ததை முன்பே கண்டோம்.

பதினேழாம் நுாற்றாண்டிலும் பல புலவர் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். சிதம்பரத்தில் வாழ்ந்த இரேவண சித்தர் அவருள் ஒருவர். சிதம்பரம் குருநமசிவாய மூர்த்தியின் சீடர் ஆனந்த நமசிவாயப் பண்டாரம் இக்காலத்தவர். தாயுமானவரை இக்காலத்தவர் எனக் கூறுவர். ஒரு கல்வெட்டின் வழி இவர் கி. பி. 1662ல் மறைந்தனர் என்பர்.[1] இவ்வாறு விசயநகர ஆட்சியில் சமயம் பற்றிய இலக்கியங்கள் தமிழில் அதிகமாய் வளர்ந்தன எனலாம்.

கலைகள்-கட்டடங்கள்!

கோயில் சித்திர வேலைப்பாடுகளைப் பற்றியும் கோயில் விமான அமைப்புக்களைப் பற்றியும் அவற்றின் வழி கலையும் பிறவும் வளர்ந்த வழிபற்றியும் கண்டு இக்காலத்-


  1. Administration & Social Life under Vijayanagar, Empire p, 367
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/321&oldid=1359181" இலிருந்து மீள்விக்கப்பட்டது