பக்கம்:தமிழக வரலாறு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XV11. விசயநகர ஆட்சிக்குப் பின்

தமிழகம்

இணைந்த இந்தியா:

தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் விசயநகர ஆட்சிக்குப் பின் தமிழராட்சி இல்லை. இசுலாமியர்களும், மராட்டியர்களும் நாயக்க மன்னர்களும் தம்முன் மாறுபட்ட நிலையில் ஆள இறுதியில் மேலை நாட்டிலிருந்து வாணிபத்தின் பொருட்டு வந்த போர்ச்சுக்கீசியரும் பிரெஞ்சுக்காரரும் டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் போரிட்டு நாட்டில் பல்வேறு கிளர்ச்சிகளை உண்டாக்கி நிற்க, இறுதியாக இந்தியாவை இணைத்து ஆங்கலேயரே ஆளத் தொடங்கினர். தமிழ்நாடு பரந்த இந்திய நாட்டுடன் முழுதும் இணைந்த நாடாக்கப்பட்டது முதன் முதல் ஆங்கிலேயர் காலத்திலேதான் எனலாம். அது மட்டுமின்றி, மேலைநாட்டு ஆதிக்கமும், பழக்கவழக்கங்களும், பிறவும் தமிழ்நாட்டை விரிந்த இந்தியாவுடன் இணைத்ததோடன்றி, உலக நாடுகளோடு பலவகையில் தொடர்பு கொள்ளவும் வைத்தன எனலாம். இந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேதான் மேலைநாட்டிலே இருந்து ஆட்சிக்காகவும், சமயம் வளர்ப்பதன் பொருட்டும். கலை நலம் காண்பதன் பொருட்டும் வந்த பலர் இங்குத் தமிழரோடு ஒன்றியதோடு, பல புத்தம்புதிய கலைகள் தமிழில் வளர்வதற்கு உதவி, பல தமிழ் நூல்களை மேலைநாட்டு ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் மொழி பெயர்த்தார்கள் எனலாம்.

கடலாதிக்கம்:

மேலைநாட்டு மக்கள் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் வருகையில் இந்நாட்டுக் கடலாதிக்கம் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/324&oldid=1358680" இலிருந்து மீள்விக்கப்பட்டது