பக்கம்:தமிழக வரலாறு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

தமிழக வரலாறு


லும், பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியிலும், டச்சுக்காரர் தரங்கம்பாடி, நாகைப்பட்டினம் முதலிய இடங்களிலும் வேரூன்ற வழித் துறைகளை ஆராய்ந்து முன்னேற்றமும் கண்டிருந்தனர். சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டை அக்காலத்திலேயே அமைக்கப்பெற்றது. முன் வந்த போர்ச்சுக்கீசியர் மேலைக் கடற்கரைப் பக்கத்திலேயே தங்கள் ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் போலும்! இந்தக் காலத்திலேதான் தமிழ் நாட்டிலே மகமது அலிக்கும் சந்தாசாகிப்புக்கும் நாட்டாட்சி காரணமாகப் பல போர்கள் நடைபெற்றன. அதே சமயத்தில் மேலை நாட்டிலே ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் போராட்டங்கள் நடைபெற்றன. அதை முன்னிறுத்தி இங்கு வாணிபத்தின் பொருட்டு வந்த ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் சமயம் பார்த்து உள்நாட்டுக் குழப்பங்களிலும் போர்களிலும் எதிரிகள் பக்கங்களில் சேர்ந்து நாட்டில் தத்தம் ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ள முயன்றனர். ஆங்கிலேயர் பக்கம் ‘கிளைவு’ம், பிரெஞ்சுக்காரர் பக்கம் 'டுயூப்ளே'வும் தலைமைதாங்கினர். சாந்தா சாகிபுவுக்குப் பிரெஞ்சுக்காரரும், முகமதுஅலிக்கு ஆங்கிலேயரும் உதவினர். இவர்கள் தத்தம் வழி உதவி அவரவர் ஆதிக்கத்தையே வளர்க்க முயன்றனர்.

மராட்டியரும் நாயக்கரும்:

இந்த மாறாட்டங்களுக்கு முன்னும் விசயநகர ஆட்சிக்குப் பின்னுந்தான் தஞ்சை மராட்டியரும் மதுரை நாயக்கரும் நாட்டைப் பல வகையில் திருத்தத்துக்குக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்தோடு ஆண்டனர். தஞ்சையில் வெங்கோஜி எனும் ஏகோஜி கி. பி. 1676 முதல் 1688 வரையிலும், ஷாஜி 1688 முதல் 1712 வரையிலும், சரபோஜி 1 கி. பி. 1712 முதல் 1728

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/326&oldid=1376147" இலிருந்து மீள்விக்கப்பட்டது