பக்கம்:தமிழக வரலாறு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர ஆட்சிக்குப் பின்

325


வரையிலும், துக்கோஜி 1728 முதல் 1736 வரையிலும் ஆண்டார்கள். அதற்குப்பிறகு நாட்டில் அரசு இல்லாத கொடுமையில் (Anarchy) பல இன்னல்கள் உண்டாயின. பின் பிரதாபசிங் 1739 முதல் 1763 வரையிலும், துல்ஜாஜி 1763 முதல் 1787 வரையிலும், அமார் சிங் 1787 முதல் 1798 வரையிலும், சரபோஜி II, 1798 முதல் 1833 வரையிலும் அரசாண்டார்கள். இவர்களும் ஆங்கிலேய பிரெஞ்சுக்காரர்தம் வேறுபாடுகளுக்கு இடையிலும் போர்களுக்கு இடையிலும் சிக்கிப் பல இன்னல்கள் உற்றுக் கடைசியில் அரசிழந்து, ஆங்கிலேயர் வசம் அனைத்தையும் விட்டு ஒடுங்கிவிட்டனர். இவர்கள் மராட்டிய மன்னராதலானும், சிவாஜி பரம்பரையில் வந்தவராதலானும் இசுலாமிய மதத்திற்கு மாறுபட்ட நிலையில் இந்து சமயத்தைப் பரப்ப முயன்றமையானும் இந்து சமய வளர்ச்சிக்குப் பல வகையில் பாடுபட்டனர். ஏறக்குறைய இதே காலத்திலேதான் இவர்கள் பரம்பரையின் ஒரு சாரர் செஞ்சியில் சிறக்க ஆண்டு, பின்பு, ஆர்க்காட்டு நவாப் முற்றுகைக்கு ஆற்றாது அழிந்தனர். அவருள் ஒருவனே கதைகளால் போற்றப்படும் இராசா தேசிங்கு.

மதுரையில் நாயக்கர் பரம்பரை இக்காலத்தில் வாழ்ந்து வந்தது. ஒரு பெரும் பேரரசாகப் பாண்டியர் போன்று மதுரையில் இருந்து ஆளாவிடினும் மதுரையில் இருந்து இறுதியாகத் தமிழ் வளர்த்த மன்னர் பரம்பரை என்று இதைச்சொல்லுவது பொருந்தும். மதுரையில் சிறக்க ஆண்ட திருமலை நாயக்கருக்குப் பின் அவர் மகனார் முத்துவீரப்பர் சில மாதங்களே ஆண்டார். பின்பு சொக்கநாத நாயக்கர் கி. பி. 1659 முதல் 1682 வரை அரசாண்டார். அக்காலத்திலே தான் பீஜப்பூர் சுல்தான்களுடைய கொடுமை தென்னாட்டில் பரவியது. எனவே, இவர் 1665ல் திருச்சிராப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/327&oldid=1358922" இலிருந்து மீள்விக்கப்பட்டது