பக்கம்:தமிழக வரலாறு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர ஆட்சிக்குப் பின்

327


சிறிது ஆட்டங்கண்டது எனலாம். சொக்கநாதர் மறைவுக்குப் பிறகு ஆர்க்காட்டு நவாபுவின் போரிடையில் மதுரை, தஞ்சை நாயக்கர் ஆட்சிகள் சின்னபின்னமாக்கப்பட்டன எனலாம்.

மராட்டியர் ஆட்சிமுறை:

தஞ்சையில் மராட்டிய மன்னர்[1] ஆண்ட காலத்தில் தமிழ் நாட்டில் மக்கள் நன்கு வாழ்ந்தனர் எனலாம். அரசருக்கு அறிவுறுத்தும் சிறு சபை இருந்தது. அறிவறிந்த மக்களையே அச்பைக்குத் தேர்ந்தெடுத்தனர். தளவாய் என்பவரே மந்திரி போன்று அரசியலில் சிறந்த முதலிடம் பெற்றிருந்தனர். அவரே சில சமயங்களில் சேனைத் தலைவராகவும் இருப்பர் போலும்! தளவாய்க்கு அடுத்துப் பிரதானி அல்லது திவான் முக்கியமானவராய் இருந்தனர். பிறகு பல பணியாளர்கள் தனித்தனி அரசியல் காரியங்களைக் கவனிப்பதற்காக ஒருவர் பின் ஒருவராக இருந்தனர் எனலாம். இவர்கள் காலத்தில் அறநிலையங்களைப் பாதுகாப்பதற்கென ஒர் அமைச்சர் இருந்தார் போலும்! அறிவுறுத்தும் தலைவரும் (advisers), எழுத்தாளரும், புரோகிதரும் அறங்கூறுவோரும், ஒற்றரும் தூதுவரும், பிறரும் அரசியல் பணியாளராய் இருந்து வந்தனர். நாடு சோழர் காலத்தைப் போலவே மண்டலங்களாகவும் நாடுகளாகவும் வளநாடுகளாகவும் பிரிக்கப்பட்டது எனலாம். ஆட்சி முறைக்காக ‘சுபேதார்’கள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு சுபேதாரிடமும் ஒவ்வொரு பகுதி ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ‘சீமை’ என்ற சொல் சிறு பகுதிக்குப் பயன் பட்டது. சாய்க்காட்டுச்


  1. 1. The Maratta Rajas of Tanjore by, K. R. Subra manian. P. 78.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/329&oldid=1358973" இலிருந்து மீள்விக்கப்பட்டது